உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




"அகரத்தா னீன்றசீ ரைங்கரத் தேவைப் பகரத்தா னாகும் பலன்'

என்றும். பிறகு அவையடக்கமாக.

"பறவைக்கு முன்றேன் பறப்பது போல வறிஞர்முன் சொல்வதே யான்

என்றும் குறள் வெண்பாக்களை எழுதி அமைத்துள்ளார். இதனையடுத்து 'நூல்' என்று குறிப்பிட்டு அதில். மூன்று வெண்பாக்களும் ஒரு எண்சீர் விருத்தமும் என நான்கு பாடல்கள் தனித்தனியே 1942 முதல் 1959 வரை வெவ்வேறு நபர்கள் கேட்டதன்படியே தாம் பாடியவாறு கொடுத்துள்ளார் பாடல் தலைப்பில் கற்பியல். பொதுவியல். களவியல் என்றும். பொதுப்பொருள் விளக்கம். பற்பொருள் விளக்கம். ஒருபொருள் விளக்கம். பல பொருளடக்கம் என்றும் குறித்துள்ளார். இதன் அடிக்குறிப்பில்.

"இத்தனிப்பா நான்கிற்கும் பூராவாக பொருள் விளக்கம் வேண்டுமென்றால் ரூ. 20. நேரிலோ அல்லது எம்.ஓ. மூலமோ அனுப்ப வேண்டும். அனுப்புகின்றவர்கள் விலாசம் தமிழில் எழுத வேண்டும். விபரமாக இருக்க வேண்டும். அன்பர்கள் ரூபாய் அனுப்பிய பிறகு ஒரு வாரத்திற்குள் பொருள் எழுதி அனுப்பப்படும்"

என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் நான்காம் பக்கத்தில், 'எனதெண்ணம்' என்ற தலைப்பில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ்த்துறை போயப் புலவர்கட்கும். முத்தமிழ் வல்லுநர்கட்கும். தமிழ்நேயச் செல்வர்கட்கும் என் மனமார்ந்த வணக்கம்.

என்னெனில் 32 இராமாயணங்கள், 19 பாரதங்களின் விரிவை எனதரும்பெரும் புலவன் எனக்குரைத்துள்ளான். ஆதலின் இதையெல்லாம் சிற்றறிவிற் கெட்டியவரை ஒரு நூலாகப் பாடிவைக்க விழைகிறேன். இதுவரை பாடியுள்ள நூல்கள். விநாயகர் வாரப்பாட்டு ஒருமுறை அச்சிட்டிருக்கிறது. நேயர்கள்பால் வந்துள்ளது என்பதை மகிழ்வாகத் தெரிவித்துக் கொள்கிறேன். முருகர் வாரப்பாட்டு. முருகவேள் அலங்காரம். வேதவரைநாதன் இம்மைவள மாலை, கந்தர்கலி விருத்தம். திருவொற்றியூர் முருகன் வண்ணமைந்து. பாரதத்திலொரு பகுதியாகிய ஜெனமே ஜெயம் இதுவரைப் பூர்த்தியாகியுள்ளது. அச்சாக வேண்டும். அவ்வப்போது பாடிய தனிப்பாடல்கள் சுமார் 50 பாடல்களில் இப்போது 4 பாட்டுகள் மட்டும் வெளி வந்துள்ளன. மற்றவை தொடர்ந்தே வரும். இதைக் கண்ணுறும் பெருந்தகையாளர்கள் நன்கொடைகள் அளிப்பாராகில் மேற்சொன்ன நூல்களெல்லாம் அச்சாகி வெளிவரும் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். மேற்சொன்ன

காகிதச்சுவடி ஆய்வுகள்

$57