உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இராமாயணம். பாரதங்கள் இன்னும் இருக்குமானால் பெரியோர்கள் தருவார்களானால் அதையும் வணங்கிப் பெற்று விளம்பரம் செய்வேன். அவர்கள் பெயரையும் வெளியிடு கின்றேன் இந்த எண்ணங்களை நேயர்கள் பூர்த்தி செய்வார்களென்று இறைவனைப் பணிகின்றேன்"

இதில், நூலாசிரியரின் புலமைச் சிறப்பு. நூல்களை அச்சிடுவதிலுள்ள சிக்கல்கள். பொருளின்மை. ஆவல். அவர்தம் பதிப்பு அறங்கள் போன்ற பலவும் புலனாகும்.

மேலும். இறுதியாக 'முக்கியக் கவனிப்பு' என்ற குறிப்புடன் பின்வரும் செய்திகளையும் அச்சிட்டுள்ளார்.

"தெய்வத் தன்மையாகிய பாட்டுகள் வேண்டுமாயின் அந்த மூர்த்தியின் பெயரும், வரலாறும். ஊரையும் குறித்துப் பாட்டொன்றுக்கு 1 ரூபாய் அனுப்ப வேண்டும். மக்களைப் பற்றிப் பாட்டொன்று வேண்டுமானால் ரூபாய் 5 அனுப்ப வேண்டும்.

தெய்வத்தன்மை பாட்டான அகவற்பா வரி ஒன்றுக்கு 4 அணா ஆகவும். மக்களைப் பற்றியானால் வரி ஒன்றுக்கு 1 ரூபாய் ஆகவும் அனுப்ப வேண்டும். இரங்கற்பா நீக்கப்பட்டது"

இச்செய்திகளின் வழி, இந்நூலாசிரியர் தம் பாடல்களுக்கு ஏற்ற பொருள் பெற்றதையும். இவர் இரங்கற்பா பாடாத நிலையையும் அறிகிறோம்.

இவர் இயற்றிய வியாசர்பாடித் தலபுராணம் 10-07-1970 அன்று சென்னையில் இதே கோயில் குடமுழுக்கு விழாவில் வெளியிடப்பெற்றது. இது உரைநடையாலானது. இதில்,

"சைவ வைணவப் பற்றுடையவர்களாகிய கனநனவான்களும் அரசாங்கமும் ஆதரவு செய்யின், சுமார் ஐயாயிரம் செய்யுளாக. புராணத்தைப் பாடித்தர முடியும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ளுவதோடு ஆதரவையும் எதிர்பார்க்கும். தி. வெ. தணிகைவேள் பாரதியார்"

என்று தம் முன்னுரையில் குறித்துள்ளார்.

எண்பது வயதிற்குமேல் "தமிழ் ஞானியாக விளங்கிய தணிகைவேள் பாரதியார் தம் முதுமையில் பெரும் வறுமையில் பெருமையுடன் வாழ்ந்தார் என்றே தோன்றுகிறது. கால மாறுபாடுகளின் காரணமாக அவர்தம் காகிதச் சுவடிகள் பல இன்னும் அச்சுருவம் பெறவில்லை. அவை அனைத்தும் வெளிவரின் அவர்தம் சமயத் தொண்டுடன் மொழித் தொண்டு பலருக்கும் புலனாகும்.

358

காகிதச்சுவடி ஆய்வுகள்