உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நம் சிந்தனைக்கு

1. இருபதாம் நூற்றாண்டில். நம் காலத்தில் வாழ்ந்த ஒரு பெரும் தமிழ்ப் புலவரைப் பற்றிப் பலரும் அறிய இயலாத சூழ்நிலைகள் இன்றும் உள்ளன. (1985இல் காலமான இவர் பிறந்த நாளைக்கூட அறிய இயலவில்லை)

-

2. அவருடைய படைப்புகள் காகிதச் சுவடிகளாகக் கிடைப்பினும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதே குறிப்பிடத்தக்கதாகும்.

3. பின்னாளில் அச்சில் வந்தால் இவ்விவ்வாறு அமைய வேண்டுமென ஆசிரியரே திட்டமிட்டு எழுதி வைத்திருப்பினும் அவற்றைப் போற்றிப் பாதுகாப்பார் இன்மையினால் பல எழுத்துக்கள் மறைந்து வருகின்றன என்பதற்கு இவரும் ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறார்.

4. நூலாசிரியரே தம் நூல்களை அச்சிடுவதில் பொருளாதாரச் சிக்கல் பல அன்றும் இன்றும் என்றுமே உள்ளன. எனவே. அந்நூல்களைத் தாள் வடிவிலேயே காகிதச் சுவடிகளாகவும் பாதுகாத்து வைக்கலாம்.

5. இத்தகைய காகிதச் சுவடிகளால் பின்னாளில் பல்வேறு வரலாற்றுப் பயன்கள் கிடைக்கக்கூடும் என நம்பலாம்.

6. கால அடிப்படையில் மொழியியல் ஆய்வுக்கும், இலக்கிய ஆய்வுக்கும். பதிப்பு ஆய்வுக்கும். சமூக வரலாற்று ஆய்வுக்கும் இத்தகைய காகிதச் சுவடிகள் உறுதுணையானவை என்னும் தொலைநோக்கில் இவற்றைத் திரட்டித் தொகுத்துப் பயன்படுத்துதல் நம் அனைவரின் கடமை என்பதையும் சிந்திப்போமாக!

செய்யுள்

பின்னிணைப்பு

தணிகைவேள் பாரதியார் இயற்றிய நூல்கள் (காகிதச் சுவடிகள்)

அருள்மிகு சுந்தர விநாயகர் திருமுருகர் திருவிரட்டை மணிமாலை திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் இம்மை வளமாலை

சென்னை, திருவொற்றியூர் இறைவன் இரட்டை மணிமாலை

கலைமகள் பாதி அலைமகள் பாதி

திரௌபதியம்மன் தோத்திரப் பதிகம்

1

2

3.

4.

சேக்கிழார் நூற்றந்தாதி

5.

6.

7.

ஜெனமே ஜெபம்

8.

விநாயகர் வாரப் பாட்டு

9.

முருகன் வாரப் பாட்டு

10.

முருகவேள் அலங்காரம்

11.

12

அயன்புரத் தலபுராணம்

13.

வியர்சர்பாடித் தலபுராணம்

சென்னை கந்தகோட்ட முருகன் ஆறாறு மாலை

காகிதச்சுவடி ஆய்வுகள்

359