உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தி.புஷ்கலா ஆய்வாளர் ஓலைச்சுவடித்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

ஆவணங்கள் மூலமும் படியும்

வணங்கள் என்பன நடைமுறை நிகழ்வுகளின் பதிவுகள் ஆகும். பல்துறை ஆய்வுகட்குப் பயன்படும் இவ் ஆவணங்கள் அவ்வக்காலத்தின் சூழல். மொழி வரலாறு. பண்பாடு. பொருளாதாரம் ஆகியவற்றைச் சமுதாயத்தின் ஒட்டுமொத்தச் சார்புடன் வெளிப்படுத்துவன. ஆவணங்கள் கல்வெட்டு, செப்பேடு. ஓலை மற்றும் தாள் சுவடி போன்ற பல வடிவங்களில் கிடைக்கின்றன. இடைக்காலம் (History of Medieval Age) வரையிலான வரலாற்றை அறிய உதவும் மூலச்சான்றுகளாகக் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் திகழ்தல் போலப் பிற்கால வரலாற்றை (History of Modem Age) அறிய உதவும் மூலச்சான்றுகளாக ஓலை மற்றும் தாள் சுவடி ஆவணங்களும் விளங்குகின்றன.

பொறிப்பதற்கு முன்பாக ஓலைகளிலேயே அவை முதலில் எழுதப்பட்டு வந்திருக்கின்றன. ஓலைநாயகம். ஓலை படிப்பார் போன்ற அரசு ஊழியச் சொற்களும் இதனை நிறுவும் இவ் அடிப்படையில் நோக்கும்பொழுது ஓலை ஆவணங்களே அனைத்திலும் முதன்மையாகக் கருதத்தக்கவை கல்வெட்டு. செப்பேடுகளின் மூலமாக விளங்கியிருக்கக்கூடிய அரசு ஓலை ஆவணங்கள் பற்றி அப்பாதுரை Economic condition in Southern India 1000 - 1500 A. D. எனும் நூலில் கூறியிருப்பது ஈண்டு கருதத்தக்கது.

பொதுவாக. கலும் செப்பேடுகளிலும் ஒரு செய்தியைப்

362

"சோழப் பேரரசர்கள் நடத்திய நில அளவை பற்றிய பல சான்றுகள் நமக்குக் கல்வெட்டு செப்பேடுகள் வாயிலாகக் கிடைக்கின்றன. முதலாம் இராசேந்திரனின் திருவாலங்காடு செப்புப் பட்டயம் வருவாய் கணக்குப் பதிவேடுகளை 'வரிப்பொத்தகம்' எனவும் அவற்றின் பொறுப்பிலிருக்கும் அலுவலரை 'வரிப்பொத்தகக் கணக்கு' எனவும் குறிப்பிடுகிறது மேலும் அரசின் முக்கிய காரியதரிசி 'ஓலைநாயகம்' என அழைக்கப்படுவதிலிருந்து அரசு ஆணைகள் முதலில் ஓலைகளில் எழுதப்பட்டு பின்பு கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டிருத்தல் கூடும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகின்றன. பனைமடல்களில் எழுதப்பட்ட

காகிதச்சுவடி ஆய்வுகள்