உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுபோன்ற ஆவணங்கள் மிக விரிவான துல்லியமான தெளிவான செய்திகளைக் கொண்டிருத்தல் கூடும். ஓலை ஆவணங்களின் 'படிகளாக' விளங்கும் கல்வெட்டு. செப்பேடுகளில் காணப்படும் விரிவான செய்திகள் வாயிலாக இவற்றை அறியலாம். திருவாலங்காடு செப்புப் பட்டயத்தில் வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள பழையனூர் எனும் ஊரின் நான்கு எல்லைகளைப் பற்றிய செய்தி 281 வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளமை இதற்குத் தக்க சான்றாகும்"

மேலும் அவர் இதுபோன்ற ஆவணங்கள் 17ஆம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் நாடெங்கிலும் பரவலாகக் காணப்பட்டிருப்பதை ஆங்கிலேயர் குறிப்புகள் வாயிலாகவும் உறுதிப்படுத்துகிறார். எனினும் இதுபோன்ற நிலஅளவை மற்றும் வருவாய் தொடர்பான அரசு ஆவணங்கள் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் புழக்கத்திலிருந்து வந்திருப்பதை அண்மைக் காலமாக அரசு அலுவலகங்களிலிருந்து கிடைத்து வரும் ஒலை ஆவணங்கள் வாயிலாக அறியமுடிகிறது. காட்டாகத் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறைக்குக் கிடைத்துள்ள செங்கற்பட்டு ஆவணங்கள். தஞ்சாவூர் ஆவணங்கள். புதுக்கோட்டை ஆவணங்கள். செங்கோட்டை ஆவணங்கள். மன்னார்குடி ஆவணங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். நாடெங்கிலும் பரவலாக இதுபோன்ற ஆவணங்கள் காணப்பெறினும் கேரளா, கர்னாடகா ஆகிய இடங்களில் இவை மிகுதியாகக் காணப்படுகின்றன. தொடர்ச்சியாக நீண்ட தகவல்களை முழுமையாக அளிப்பது இவ்வகை ஆவணங்களின் தனிச்சிறப்பாகும். நிலஅளவு. வருவாய். சமூகப் பொருளாதாரம் பற்றிய ஆய்வுகட்கு இவை பெரிதும் துணைநிற்பன.

மூல

கல்வெட்டு செப்பேடுகளுக்கு மூலங்களாக ஓலை ஆவணங்கள் விளங்கி வந்திருப்பதைப் போலத் தாள் சுவடி ஆவணங்களுக்கும் ஓலை ஆவணங்கள் ஆவணங்களாகத் திகழ்ந்திருப்பதை 18ஆம் நூற்றாண்டுச் செங்கற்பட்டு ஆவணங்கள் உறுதி செய்கின்றன. அவை அவற்றின் சுருக்கப் படிகளாக ஆங்கிலத்தில் காணப்படும் பெர்னார்டு கணக்குகளைக் (Bernard Accounts) காட்டிலும் மிக விரிவான தகவல் தரவுகளைக் கொண்டு விளங்கும் சிறப்பினை உடையன. எனினும் சில சமயங்களில் மூல ஓலை ஆவணங்கள் உடைந்தும், சிதைந்தும், அழிந்தும் காணப்படும் நிலைகளில் முழுமையான தரவுகளைப் பெறப் 'படி ஆவணங்களும்' சிறப்பாகத் துணைபுரிகின்றன. இந்நிலையில் இவ்விருவகை ஆவணங்களையும் ஒப்பிட்டு ஆய்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வு முடிவுகள் தரமும். தெளிவும். நம்பகத்தன்மையும் (Authenticity) பெறுதல் கூடும் என்பதை எடுத்துக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.

செங்கற்பட்டு ஓலை ஆவணங்கள் மூல ஆவணங்கள்

செங்கற்பட்டு ஓலை ஆவணங்கள் கி. பி. 1760 முதல் 1860 வரையிலான காலத்தைச் சேர்ந்தவை. நூற்றியறுபது பெருஞ்சுருணைகளாகக் காணப்படும் இவ் ஆவணங்கள் செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினின்று அண்மையில் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறைக்குக் கிடைக்கப் பெற்றன. ஒவ்வொரு சுருணையும் இருபுறமும் எழுதப்பட்ட சுமார் 1000 ஓலைகளைக் கொண்டு காகிதச்சுவடி ஆய்வுகள்

+363