உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




விளங்குகின்றன இவற்றுள் சுமார் 20 சுருணைகள் கி. பி. 1767இல் செங்கற்பட்டுப் பகுதியில் ஆங்கிலேயர் மேற்கொண்ட பெர்னார்டு கணக்கெடுப்பு (Benard Survey 1767-74) எனும் நேரடி நிலஆய்விற்கு மூல ஆவணங்களாகப் பயன் படுத்தப்பட்டவை. அந்த வகையிலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முற்பட்ட ஆவணங்கள் (Pre-British Records) என்ற வகையிலும் இவை வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. அடிப்படையில் வருவாய்க் கணக்குக் குறிப்புகளாக விளங்கும் செங்கற்பட்டு ஆவணங்கள் சுமார் 2100 கிராமங்களுக்கான தகவல் தரவுகளைக் கொண்டவை. சமூகப் பொருளியல் ஆய்வுகட்கு மிகச் சிறப்பாகத் துணைபுரியும் இவ் ஆவணங்கள் ஒவ்வொரு கிராமத்தின் நில அமைப்பு. கிராம சமுதாயம். சாகுபடி. மகசூல், மானியம் தீர்வை. பல்வேறு இனமக்கள். அவர்தம் தொழில் போன்ற பல்வேறுவித சமூகப் பொருளியல் செய்திகளைத் தரப்படி வகை ஏடு. துகை ஏடு. வாரச்சட்டம், சுதந்திரத் திட்டம், மேரைத் திட்டம். தும்பால் மானிய வயணம் ஏரி அளவு. வீட்டு வயணம். பேரிசுவகை ஏடு போன்ற பலவிதத் தலைப்புகளில் மிக விரிவாகத் தருகின்றன.

பெர்னார்டு கணக்குகள் - படி ஆவணங்கள்

செங்கற்பட்டு தென்னிந்தியாவில் ஆங்கிலேயர் காலனி ஆதிக்கத்திற்கு அடித்தளமாக விளங்கிய பகுதியாகும். ஆற்காடு நவாப் முகமது அலியிடமிருந்து ஜாகீராகப் பெறப்பட்ட இப்பகுதியின் மதிப்பையும். வருவாயையும் அறியும் பொருட்டும் நில அளவை தொடர்பான கணக்கெடுப்பை ஆங்கிலேயர் மேற் கொண்டனர் சர் தாமஸ் பெர்னார்டு என்பவரால் மேற்கொள்ளப் பெற்ற இக் கணக்கெடுப்பு சுமார் 7 ஆண்டுக் காலம் நடைபெற்றது. இக்கணக்கெடுப்பின்போது ஒவ்வொரு கிராமத்திலும் வைக்கப்பட்டிருந்த நில ஆவணங்கள் (செங்கற்பட்டு ஓலை ஆவணங்கள்) பெர்னார்டுக்குக் கிடைத்தன. அவற்றின் வாயிலாகப் பெறப்பட்ட தகவல்களின் சுருக்கத்தை ஒரு குறிப்பிட்ட வடிவில் மொழிபெயர்த்துச் சென்னை வருவாய்க் கழகத்தில் (Madras Board of Revenue) பெர்னார்டு சமர்ப்பித்தார்.

பெர்னார்டு நில ஆய்வின் மூலம் பெறப்பட்ட கணக்குப் பதிவேடுகள் பெரும்பான்மையும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்தில் காணக் கிடைக்கின்றன. போர்டு ஆப் ரெவின்யூ மிச்லேனியஸ் பிரிவில் 40 தொகுதிகளும் 50. 50 A. 51, 51 A. 52, 52 A, 53, 53 A, 54, 54 A. 55, 56, 57.58.58.A. 59,60,60 A, 61, 61 A. 62, 63, 64, 64 A, 65, 65 A, 66, 67, 67 A., 68, 69, 69 A, 70, 70 A. 71, 72, 73, 89) செங்கற்பட்டு மாவட்ட ஆவணங்கள் வரிசையில் 10 தொகுதிகளும் 527. 542. 543.544,545, 546 547,548, 549,550) உள்ளன. இவற்றில் பல 1775 - 76 வருடசபை நடவடிக்கைகளில் எடுத்தாளப்பட்டு வந்திருக்கின்றன.

கிராம சமுதாயம். நிலவருவாய் தொடர்பான பல்வேறுவித சமூகப் பொருளியல் ஆய்வுகட்கு இவை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. எனினும் இவற்றின் மூல ஆவணங்களான செங்கற்பட்டு ஓலை ஆவணங்கள் மிக விரிவான். தெளிவான துல்லியமான தகவல் தரவுகளைத் தாங்கி நிற்பதால் கூடுதல் சிறப்பு வாய்ந்தவை. எனவே இவ்விரு ஆவணங்களின் துணைகொண்டு மேற் கொள்ளப்படும் ஆய்வுகள் முழுமையும். தெளிவும். நம்பகத்தன்மையும் பெற்று

364

காகிதச்சுவடி ஆய்வுகள்