உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஏடுகளில் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கான (1763-67) மொத்த உற்பத்தி மற்றும் மகசூல் குறிப்பிடப்பட்டு அவற்றிலிருந்து மானியக்கழிவு நீக்கப்பட்டு. சமை மானியம் மற்றும் குடிவாரப் பங்குகள் நீங்கலாக அரசுக்குச் சேரவேண்டிய வருவாய் (தானியமாகவும். ரொக்கமாகவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது

வடக்குப்பட்டு பெர்னார்டு ஆவணங்களில் கிராம மொத்த நிலப்பரப்பு தரவாரிப் பிரிவுகள். நிலப்பயன்பாடு, வீடு, மக்கள், சாதி, தொழில். மானியங்கள். அவற்றைப் பெற்றோர் விவரம். தானியமாகவும். ரொக்கமாகவும் கிடைத்த அரசு வருவாய். மொத்த விளைச்சலிலிருந்து பங்குகளைப் பெற்று வந்தோரின் விவரம். ஏரிகள் செப்பனிடப்படுவதற்கு ஆகக்கூடிய செலவுகள். அவற்றின் வாயிலாகக் கிடைக்கக்கூடிய வருவாய் போன்ற செய்திகள் மிகச் சுருக்கமான முறையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. எனினும் இத்தரவுகள் சுருக்கமாகக் காணப்பெறினும் முழுமையாகக் கிடைக்கப் பெற்றிருத்தல் இதன் சிறப்பாகும்.

பொதுவாக நீடிப்புத் தன்மை குறைவின் காரணமாக ஓலை ஆவணங்கள் காலப்போக்கில் உடைந்தும், சிதைந்தும். பூச்சி அரிப்பிற்குட்பட்டும் காணாமல் போகவும் வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற சமயங்களில் விடுபட்டுப் போன தகவல்களைப் பெறப் 'படி ஆவணங்கள் பெரிதும் துணை செய்யக்கூடும். காட்டாக வடக்குப்பட்டு மூல ஆவணங்களில் ஏடுகள் - 1,3. 10 ஆகியவற்றின் சில பகுதிகள் உடைந்து போயிருப்பதைக் காணமுடிகிறது. 1.3 ஆகியவற்றில் குட்டைகள் பற்றிய செய்தியும் ஏடு-10இல் இடையர்கள் வீடுகளின் எண்ணிக்கையும் விடுபட்டுப் போயிருக்கின்றன இதுதவிர 4.5 மற்றும் 6ஆவது ஏடுகள் முழுவதும் காணாமல் போய்விட்டமையால் அவற்றில் இடம்பெற்றிருக்கக்கூடிய மலை. காடு. காணியாட்சி. குடிகள் பற்றிய விவரம். அவர்களின் வீடுகள் போன்ற தரவுகள் மூல ஆவணங்களிலிருந்து கிடைக்கவில்லை. எனினும் இவை பெர்னார்டு ஆவணங்களிலிருந்து கிடைப்பதால் வடக்குப்பட்டுக் கிராமத்தைப்பற்றி முழுவிவரங்களையும் அறியமுடிகிறது.

மேலும் எரியளவு. வாரச்சட்டம். மேரைத்திட்டம் போன்ற பல முக்கியத் தரவுகள் அடங்கிய பகுதிகளும் மூல ஆவணத்தில் காணாமல் போய்விட்ட நிலையில் பெர்னார்டு ஆவணங்கள் பெரிதும் உதவுகின்றன.

இவைதவிரச் சில சமயங்களில் இச்சுருக்கப்படி ஆவணங்களில் கூடுதல் மூல ஆவணத்தில்

தரவுகள் கிடைக்கவும் வாய்ப்பிருபட்டுள்ள நிலையில் படி ஆவணத்தில்

இது conigo of the D

எனக்

என்பவர் மாவட்ட அளவிலான அரசு ஊழியர் என்பது புலப்படுகிறது.

எனினும் பெர்னார்டு ஆவணங்கள் சுருக்கப் படிகளாகவும். மொழி பெயர்ப்பு ஆவணங்களாகவும் காணப்படுதலால் மூல ஆவணங்களில் இடம்பெற்றுள்ள கலைச்சொற்கள் (Technical terms) மேலோட்டமாகவும் தெளிவில்லாமலும் மொழிபெயர்ப்பும். ஒலிபெயர்ப்பும் செய்யப்பட்டிருத்தலைக் காணமுடிகிறது அவற்றில் சில வருமாறு:

366

காகிதச்சுவடி ஆய்வுகள்