உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செய்யப்படும் பொழுதும். மீண்டும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் ஒலிபெயர்ப்புச் செய்யப்படும் பொழுதும் இவற்றின் பொருள் மாறிப்போக அல்லது பொருளற்றுப் போக வாய்ப்பிருக்கிறது. காட்டாக Wilson's Glossory 'குப்பத்தம்' என்பதை Kuppadan என ஆங்கிலத்தில் குறிப்பிட்டுத் தமிழில் குப்படமாகவும் காட்டியுள்ளது ஈண்டு சுட்டத்தகுவதாம்.

கலைச்சொற்கள் மட்டுமன்றி நூற்றுக்கும் மேற்பட்ட குறியீடுகளையும் இம்மூல ஓலை ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. எண் மற்றும் எழுத்து வளர்ச்சி பற்றிய (Paleaography) ஆய்வுகட்கு மிகச் சிறப்பாகத் துணை செய்வன. மொழியியல் பார்வையிலும் இவை அளிக்கக்கூடிய செய்திகள் பலவாகும். சுருங்கக்கூறின் இம்மூல ஆவணங்கள் மிக விரிவான விளக்கங்களைக் கொண்டிருப்பதால் சமூகப் பொருளியல் வரலாறு மட்டுமன்றி வருவாய் - கலைச்சொற்கள். குறியீட்டுத் தொகுப்புகள் நிலப்பயன்பாடு மற்றும் வேளாண் கலைச் சொற்கள், வழக்காற்றுச் சொற்கள். இடப்பெயராய்வு. தனி மனிதப் பெயராய்வு எனப் பல நிலைகளில் மொழியை ஆய்வு செய்து வளப்படுத்தப் பெரிதும் உதவக்கூடியன.

இதுகாறும் கூறியவற்றால் மூல ஆவணங்களுக்கும். படி ஆவணங்களும் உரிய தனித்தன்மைகளும் சிறப்பியல்புகளும் எடுத்துக்காட்டப்பட்டதுடன், இவ்விருவகை ஆவணங்களை ஒப்பீட்டு நோக்கில் ஆய்ந்து வெளிப்படுத்தப்படும் ஆய்வு முடிவுகள் நிறைவானதாகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் திகழக்கூடும் என்பதும் எடுத்துக் காட்டப்பட்டது.

368

காகிதச்சுவடி ஆய்வுகள்