உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மொ. மருதமுத்து ஆராய்ச்சி உதவியாளர்

இலக்கியம் மற்றும் சுவடியியற்புலம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

சென்னை

தாள் சுவடிகளில் தனிப்பாடல்கள்

முன்னுரை

அமிழ்தினுமினிய செந்தமிழ் மொழியானது இலக்கிய. இலககண வகைகளால் நிறைந்து. உயர்தனிச் செம்மொழியாய்ப் பல்லாயிரமாண்டுகட்கு முன்பிருந்தே பீடுநடையுடன் உலவிவந்து நிற்கின்றது. பண்டிருந்து தமிழை வளப்படுத்த வேண்டிச் செந்தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் தோன்றி. அரிய பல தமிழ் நூல்களையும். தனித்தமிழ்ச் செய்யுட்களையும் இயற்றித் தந்து, தமிழன்னைக்குரிய அணிகலன்களாக அவற்றை அளித்துள்ளனர். அத்தக்கோரை யெல்லாம். அவ்வக்காலத்திலிருந்தே தமிழ் நாட்டு முடிமன்னர்களும், குறுநில மன்னர்களும். வேண்டுவன ஈந்து காப்பாற்றி அவர்தம் தமிழ்ப்பணி தட்டின்றி நடத்தற்குத் துணை நின்றனர்.

சங்க காலத்திற்கு முன்னரும் பின்னருமிருந்த அரும்பெரும் புலவர்கள் அருளிச் செய்த நூல்களை. கடல்கோள் முதலியவற்றால் அழிந்தவை போக எஞ்சியவற்றை, பிற்காலத்து வந்த தமிழ்ப்பெருமக்கள் தம் கண்ணினுஞ் சிறந்தனவாகக் கருதிக் காத்து வந்தனர். அவையே இராமாயணம். மகாபாரதம். எட்டுத்தொகை. பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு. ஐம்பெருங் காப்பியங்கள். ஐஞ்சிறு காப்பியங்கள் என்பனவாகும். இவை யாவும் அண்மைக் காலத்திலிருந்த தமிழ்ப் பெரியோர்களால் அச்சிடப்பெற்று வெளியிடப் பெற்றுள்ளன. இவையன்றித் தமிழ் மொழியின்கண்ணே. இடைக்காலத்தும் பிற்காலத்துமிருந்த தமிழ்ப் புலவர்களால் சிற்றிலக்கியங்களும். தனித்தனிச் செய்யுட்களும் இயற்றப்பட்டன. அவற்றுள்ளும் பெரும்பான்மையானவை அச்சிடப்பட்டனவாயின, அச்சிடப் பெறாமல் ஓலை மற்றும் தாள் சுவடிகளினூடே, புதைந்து கிடக்கும் பல செய்யுட்களுமுண்டு.

இவை தனித்தனியாகத் தனித்தனிப் புலவர்களால் வெவ்வேறு காலத்தில் தனித்தனி மனிதர்களைப் பற்றியும். பல்வேறு பொருண்மைகளைப் பற்றியும். பாடப்பட்டனவாதலின் 'தனிப்பாடல்கள்' என்று பெயர் பெறுகின்றன. அவ்வாறாகிய தனிப்பாடல்கள் பல அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் ஓலைச்சுவடிகளிலும் தாள் சுவடிகளிலும் பாதுகாக்கப்பெற்று வருகின்றன. அந்நூலகத் தாள் சுவடிகளில் அமைந்துள்ள தனிப்பாடல்கள் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.

காகிதச்சுவடி ஆய்வுகள்

371