உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தனிப்பாடல் சுவடிகள்

அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் சுமார் 17.000க்கும் மேற்பட்ட தமிழ் ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பெற்றுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் தனிப்பாடல்கள் பற்றிச் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் காணப்பெறுகின்றன. இவ் ஓலைச்சுவடிகளிலிருந்து சுமார் இருபது சுவடிகளின் பாடல்கள் தாள் சுவடிகளில் எழுதி வைக்கப்பெற்றுள்ளன. அத்தாள் சுவடிகளின் எண்கள் முறையே R. 323. R 578. R 579. R 590. R 1728; R 2144. R 2146.R 2147, R 5937. R 6378. R 6384 ஆகும். இச்சுவடிகளில் சில, பாடல்கள் முழுமை பெற்றும் பெறாமலும் காணப்படுகின்றன. இவற்றில் R 323, R 578, R 590, R 5937 ஆகியவற்றையும். சில ஓலைச்சுவடிகளிலுள்ள தனிப்பாடல்கள் ஆகியவற்றையும் சேர்த்து. 1057 பாடல்கள் அடங்கிய நூலினை. இந்நூலகம் 'தனிப்பாடற்றிரட்டு' என்ற பெயரில் 1960ஆம் ஆண்டில் பதிப்பித்துள்ளது. இப்பாடல்களில் 252 பாடல்கள் தாள் சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப் பெற்றவையாகும். இன்னும் பதிப்பிக்கப் பெறாமல் உள்ள தாள் சுவடிகள் மற்றும் ஓலைச்சுவடிகளிலுள்ள தனிப்பாடல்கள் ஏராளம்,

தனிப்பாடல்களால் அறிய வருவன

தனிப்பாடல்களின்கீழ் அடங்கியுள்ள செய்யுட்கள் அகம். புறம் பற்றிய பல செய்திகளையும் தன்னகத்தே கொண்டு நகை. அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம். பெருமிதம் வெகுளி, உவகை, சமநிலை முதலிய ஒன்பான் சுவைகளையும் விளக்கும் பெற்றியனவாகச் சொல்நயம். பொருள்நயம். ஓசைநயம் இவற்றுடன் பொருந்தி. உவமை முதலிய பல்வகை அணிநலன்களையும் கொண்டு அறிவிற்கின்பம் பயப்பனவாய் அமைந்து காணப்படுகின்றன.

ஓலைச்சுவடிகள் மற்றும் தாள் சுவடிகளில் காணப்பெறும் தனிப்பாடல்கள் தெய்வங்கள் பற்றியும், இடைக்காலத்தும் பிற்காலத்துமிருந்த அரசர், அமைச்சர். வள்ளல். புலவர் ஆகியோரின் சரித்திரங்களை அறிவதற்கும், அக்காலத்துத் தமிழ்ப் பெருமக்களின் பழக்க வழக்கப் பண்பாட்டுக் கூறுகளை அறிவதற்கும், அக்காலத்தில் இலக்கியங்கள் பற்றி அறிவதற்கும் பயன்படுகின்றன. இத்தனிப்பாடல்களைப் பாடியோரும். பாடப்பட்டோரும் காலம், இடம் ஆகியவற்றான் வேறு பட்டோரேயாவர்.

தனிப்பாடல்கள் உணர்த்துவன

இத்தனிப்பாடற்கண் இறைவணக்கத்திற்குரிய பக்திவகைப் பாடல்களும். தலைவன் தலைவியரைப் பற்றிய அகத்திணைப் பாடல்களும், உலகியலை உணர்த்தும் புறத்திணைப் பாடல்களும் அடங்கியுள்ளன. இவை யாவும் மக்கட்கு வேண்டிய அன்பு.அருள். அறம். நல்லொழுக்கம், கடவுள் பக்தி, பெரியோர்ப் பணிதல். ஈகை. வீரம் முதலிய பல்வகைப் பண்புகளையும் செவ்விதின் எடுத்துக் கூறும் பாங்கினவாய் அமைந்துள்ளன.

சிறப்புச் செய்திகள்

372

அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத் தாள் சுவடித் தனிப்பாடல்களின் வழி காகிதச்சுவடி ஆய்வுகள்