உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அரசர்கள், வள்ளல்கள். புலவர்கள். தெய்வங்கள். ஊர்கள் பற்றிய பல்வேறு செய்திகள் அறிய வருகின்றன.

இராமன். இராவணன், கரிகாலன், குலோத்துங்கன், நளன். மாவலி. மாறன் குலசேகரன் திருமலைராயன். சேதுபதி முத்துராமலிங்கத்துரை, ரெகுநாத சேதுபதி. கெவுரி வல்லப மகாராசர். வேங்கடேசுர எட்டன். குமார எட்டேந்திரன், போதகுரு மன்னன் முதலிய பல்வேறு அரசர்கள் பற்றியும். சோலையப்பன், மாந்தைநகர் வள்ளல். சீதக்காதி, பொன்னம்பலசாமி. இலக்குமணப் பெருமாள் எனும் இலட்சுமணப் பூபதி, நாராயணேந்திரன். அரங்கநாத சேதுபதி. சாமிநாத சேதுபதி வடுகநாத பூபதி. சிட்டநாதன். பழனியப்பச் செட்டி கருமாணிக்கன். அருணாசலம், கூவத்து நாராயணன். ஏலேலசிங்கன். இராமபத்திரன். இராசப்பபிள்ளை. வங்காரு துரைசாமி. திருமாமலைக் காங்கேயன், உரூபாய பூபதி. விசயரங்கநாதன். நரசிங்கன். சுப்பிரமண்யன் முதலிய பல்வேறு வள்ளல்கள் பற்றியும் இத் தனிப்பாடல்கள் எடுத்தியம்புகின்றன.

அனுமன், இந்திரன், சிவன். திருமால். பிரமன். விநாயகர், முருகன். வள்ளி. தெய்வானை. மீனாட்சி. இலட்சுமி. பத்திரகாளி முதலிய பல்வேறு தெய்வங்கள் பற்றியும் போற்றித் துதிக்கும் பாடல்கள் அமைந்துள்ளன.

திருச்செந்தூர். திருக்காஞ்சி. திருவாவடுதுறை. திருவெண்ணெய் நல்லூர். திருத்தணிகை. திருவாரூர். திருமயிலம், திருநெல்வேலி. திருக்கோளூர். செருந்திவனம். திருக்காளத்தி. திருக்கயிலை. திருக்கழுக்குன்றம். திருமதுரை. திருவண்ணாமலை. சோணகிரி. பொய்கையூர். மாந்தைநகர், திருப்பரங்குன்றம். திருத்தில்லை. திருக்குற்றாலம். திருக்குடந்தை. வேலங்குடி. தேனிமலை. வங்கம். கலிங்கம். குன்றக்குடி. செட்டிகுளம். மிதிலை. திருப்பெருந்துறை ஆலங்காடு. புள்ளிருக்குவேளூர், பழனி, திருக்குறுங்குடி, வேங்கடம். செஞ்சி. திருமறைக்காடு. திருக்குருகூர், திருப்பேரை, அருப்புக்கோட்டை, சிவகங்கை. திருவொற்றியூர் ஆகிய ஊர்கள்பற்றியும் அவ்வூர்களில் அமைந்துள்ள தெய்வங்கள்பற்றியும் வள்ளல்கள் பற்றியும் தனிப்பாடல்கள் பல இத்தாள் சுவடிகளில் காணப்படுகின்றன.

மேற்கண்ட அரசர்கள். வள்ளல்கள், தெய்வங்கள், ஊர்கள் ஆகிய பல்வேறு

செய்திகளைப்பற்றி அதிமதுரகவிராயர், இரட்டையர். ஒட்டக்கூத்தர். ஒளவையார். கம்பர். காளமேகப்புலவர். ஒப்பிலாமணிப் புலவர். புகழேந்திப் புலவர். சவ்வாதுப் புலவர். காளிமுத்துப் புலவர், நமச்சிவாயப் புலவர். பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். பொய்யாமொழிப் புலவர்.சிவப்பிரகாச சுவாமிகள். வேலைய சுவாமிகள். சங்கரமூர்த்திப் புலவர். அழகிய சிற்றம்பலக் கவி, மல்லைக் குழந்தை நாவலன். குழந்தைக் கவிராயர். மங்கைபாகக் கவிராயர். குமாரசுவாமிக் கவி. வெண்பாப்புலிக் கவிராசர். அரவங்குறிச்சிச் சொக்கலிங்கக் கவிராசர். முத்துக் குமாரசாமி. சுப்பிரமணியப் புலவர். நையாண்டிப் புலவர். இராமச்சந்திரக் கவிராயர் மற்றும் பெயர் தெரியாத பல புலவர்கள் பாடிய பல்லாயிரக்கணக்கான தனிப்பாடல்கள் தாள் சுவடிகளில் மலிந்து காணப்படுகின்றன.

இனி.நயமிக்க சில பாடல்கள் இப்பகுதியில் ஆராயப்படுகின்றன.

காகிதச்சுவடி ஆய்வுகள்

973