உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சங்கரமூர்த்திப் புலவரின் தனிப்பாடல்கள்

மாணிக்கவாசகர் அம்மானை என்னும் நூலினை இயற்றிய சங்கரமூர்த்திப் புலவர் சிற்சில சமயங்களிற் பாடிய பாடல்களாக, பத்துப் பாடல்கள் தாள் சுவடியில் காணப்படுகின்றன. இப்பாடல்கள் திருச்செந்தூர் முருகனைப் பற்றியதாக அமைந்துள்ளன.

சுப்ரமணிய சுவாமி துணையென்றே செப்பரிய வெத்தூரஞ் சென்றாலும்

எப்பொழுதுங்

கூடிவரு மென்மேலுங் கூப்பிட்டா லேனேனென்

றோடிவரும் வேலுமயி லும்"

மெலிந்தானொருவனை வலியானொருவன் துன்புறுத்த வரும்போது. அம்மெலிந்தான் யாரேனுமொருவரைத் துணைக்கழைத்துத் தன்னைக் காக்கும்படி வேண்டுவது உலகியல்பு. அதைப்போன்ற காட்சி வருமாறு:

"என்னத்தா! செந்தாரா! வென்றாலே மாரயெமன் பின்னைத்தான் வந்து பிடிப்பானோ? - கன்னத்தே போடாதோ! வீடுபுகுந்து துரத்திக்கொண்

டோடாதோ' வேலுமயி லும்"

குறிப்பு: மெலிந்தவர் புலவர் சங்கரமூர்த்தி. வலியவர் - எமன். துணைவந்தவர்- முருகப்பெருமான்.

புலவர் சங்கரமூர்த்திக்கு முருகன் வருவான். அருளைத் தருவான்' என்ற நம்பிக்கை மிகுதி. இதனை. திருச்செந்தில் முருகக் கடவுள் சந்நிதியில் அலங்காரம் பண்ணுகிற சமயம் திரை போட்டிருக்கச் சீக்கிரம் முடியாமற் தாமதித்தபோது தரிசனையின் அவாவுற்றுச் சொன்ன பாடலின் மூலம். தம் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.

"வேலுக்குச் சொல்லி மயிலுக்குச் சொல்லிநின் வீரதண்டை காலுக்குச் சொல்லி யபயமிட்டேன்பின் கருங்குறப்பெண் பாலுக்குச் சொல்லி யழுதுவிட் டேன்முகம் பார்குமரா! மாலுக்குச் சொல்லி மால்யானை யுய்ந்த வகையென்னவே"

மேலும். புளியங்கொம்பு ஒடியச் சொன்னது. தென்னை மரத்தினின்று தேங்காய் நெற்று அறுந்துவிழச் சொன்னது. ஒருநாள் பசிப்பிணியின் நிமித்தம் சொல்லியது. மாசி மகோற்சவத்திற் சொல்லிய வாகனக் கவி முதலான பல பாடல்கள் இவர் பாடிய பாடல்களாக அமைந்து நயமிகுந்தனவாக உள்ளன.

மடலேறுதலில் புதுமை

தலைவனொருவன். தான் விரும்பிய பெண்ணை மணம் செய்யவேண்டி பல்வேறு முயற்சிகளையும் செய்து. இறுதியில் 'மடலேறுதல்' என்ற முடிவிற்கு வந்துவிட்டான். அதைச் செய்து முடிப்பதற்குரிய அவனது திட்டம். புதிய முறையிலல்லவா அமைந்துள்ளது! எப்படி?

374

"எழுவே னுதிக்குமுன் பொற்றா மரைதனி லேபடிந்து தொழுவேன் கயற்கண்ணி பாதத்தையே காலன் சூலத்தையே

காகிதச்சுவடி ஆய்வுகள்