உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கொழுவாய் மடக்கி யவன்கையில் பாசத்தைக் கொண்டுகட்டி உழுவே னெருமைக் கிடாவினில் நானிந்த ஊர்முற்றுமே"

எண்ணிய எண்ணியாங் கெய்த வேண்டிச் சோம்பலை நீக்கிய தலைவன் அதிகாலையிலேயே எழுந்திருக்கிறான்; தான் விரும்பும் பொருள் பெண்ணாதலின். பெண் தெய்வமாகிய கயற்கண்ணியைப் பணிகிறான். ஒருசமயம் மடலூர்கையில் உயிர்க்கேதம் வருமோ என நினைத்து. காலனது சூலத்தையும் பாசத்தையும் பிடுங்கி. அவற்றைத் தன் செயலுக்குரிய கருவிகளாகவும் மாற்றிக் கொண்டு விடுகிறான். இனி அவனது நோக்கம் நிறைவேறுவதில் தடையென்ன? ஒன்றுமில்லை. எளிய பாடலாயினும் உட்பொருளைச் சிறக்க வைத்துப் போயுள்ளார் இப்பாடலை இயற்றிய புலவர்.

தலைவன் வாட்டமுறுதல்

நிலவெழுதல் கண்டு வாட்டமுற வேண்டியவள் தலைவி. அப்படியிருக்க இங்குத் தலைவன் வாட்டமுறக் காரணம் என்ன? அதைப் பின்வரும் பாடல் உணர்த்தும்

"இந்த நிலவங்கே யெழுமே; யெழுந்தாக்கால்

கந்தமலர்ப் பூங்குழலாள் கண்டாளேல் - சிந்தைமிகத்

தேடுமே நாமிருந்த சேதிதனை யேநினைந்து

வாடுமே நோமே மனம்"

இங்ஙனம் ஆறாவன்பு படைத்த தலைவனிடம் மாறாவன்பு வைப்பது தலைவிக்குரிய கடனன்றோ? இருவருக்கும் இன்ப துன்பங்கள் சமந்தானே ஆகையினால்தான் தலைவனைப் பிரிந்த தலைவி, "கொற்கோ கிலங்காள் துலங்கோ திமங்காள்; தோகைக் குலங்கள் சுகங்காள் மிருகங்காள்" என அவற்றை விளித்து, தலைவன் சென்றது. 'தெற்கோ வடக்கோ குடக்கோ குணக்கோ' கூறுவீர் என்று கேட்கின்றாள். இயற்கைதானே!

கொடைச் சிறப்பைக் கூறும் பாடல்

மாந்தைநகர் வள்ளலை ஒரு புலவர் பாடும் பாடல் வருமாறு :

"மாந்தைநகர் வேந்தா மகுடத் தியாகியருக்

கேந்து தளும்பு யிரண்டுண்டு -வேந்தர்

படித்தழும்பு கையிலே பார்"

குடித்தழும்பு காலிலே; முத்தமிழோர்க் கீய்ந்த

வள்ளலுக்கு

இரண்டு

இப்பாடலின் கருத்து : மாந்தைநகர் தழும்புகளுண்டாம். ஒன்று. காலில் வேந்தர் குடித்தழும்பு: இரண்டாவது. கையில் முத்தமிழ்ப் புலவோர்களுக்கு ஈய்ந்த படித்தழும்பு. இதைக் கேட்கும்பொழுது. அன்று. மெல்லிய வாமால் நுங்கை' எனக்கேட்ட சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் புலவர் கபிலர் பெருமான் கூறிய பதிலல்லவா நினைவுக்கு வருகிறது.

மேலும். இன்னொரு பாடல் தமிழின் பெருமையினையும். அவற்றைப் பேணி வளர்ப்பவனின் சிறப்பினையும் மிகவும் அழகாக எடுத்துரைக்கும் விதம் காகிதச்சுவடி ஆய்வுகள்

375