உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




றஇருக்கலாம். பரம்பரைக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சரி, நற்செய்தி நூல்களின் கோணத்தில் எடை போட்டாலும் சரி. சில உரைகளைத் தவிர மற்ற உரைகளை இயேசு மொழிந்திருக்கக்கூடும்.

இன்னும் சில பாப்பைரி தனிப்பட்டவர்களது கடிதங்களாகும். கிறிஸ்தவர்களால் எழுதப்பட்டன. லௌகீக விஷயம் பற்றியவை. ஆட்சியாளர் எழுதிய லிகிதங்கள், பானையோட்டிலாவது. பாப்பைரசிலாவது எழுதிய இரசீதுகள் இவையெல்லாம் கிரேக்க - உரோமர் கலாச்சாரத்தை விளக்கி நிற்கின்றன. பவுலின் காலத்திய கிரேக்க மரபுத் தொடர்புகளை ஊகிக்க உதவுகின்றன.

பேதுருவின் நற்செய்தி நூலும், பேதுருவின் தரிசனமும் கி. பி. 1885இல் கண்டுபிடிக்கப்பட்டன. இவை பெரும்பாலும் பிற்காலத்தில் எழுதப்பட்டவை. நான்கு நற்செய்தி நூல்களின் மாதிரியைப் பின்பற்றுகின்றனவேயன்றிப் புதுமையாக எதையும் கூறுவதில்லை. இவை கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை, கி. பி. 1934இல் காணப்பட்ட ஒரு பிரதி சுமார் கி. பி. 150ஆம் ஆண்டைச் சார்ந்தது. லூக். 1:1ஐ ஊன்றிப் பார்த்தால் இயேசுவின் ஊழியத்தைப் பற்றிய நூல்கள் பல இருந்தன என்பது தெரியவரும். எனவே காய்தல். உவத்தலின்றி அகழ்வு தரும் இந்நூல்களைப் பொறுமையாக ஆராய்வது நலம் பயக்கும்.

மேல் எகிப்துவில் நாக்ஹம்மாடி அருகே உள்ள செனோபொஸ்கியான் என்னுமிடத்தில் தோலில் சுற்றப்பட்ட 44 பாப்பைரஸ் எழுத்துப் பிரதிகள் உள்ளூர்வாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டன. கி. பி. 1947இல் கண்டுபிடிக்கப்பட்ட எசனோபொஸ்கியான் பிரதிகள்

1. வாய்மை நற்செய்தி

2.

3.

பிலிப்புவின் நற்செய்தி

தோமாவின் நற்செய்தி

எனப் பெயர் பெறும். இவற்றிற்கும் மற்ற நான்கு நற்செய்தி நூல்களுக்கும் தொடர்பே இல்லை. கிறிஸ்து நிகழ்த்தியதாகக் கூறப்படும் உரைத் தொகுப்புகள் இவை கி. பி. 4ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. கிரேக்க மூலத்தின் மொழி பெயர்ப்பாகும். இந்தக் கிரேக்க மூலம் கி. பி. 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது எனச் சில அறிஞர்கள் கூறியபோதும் அதற்குச் சரியான சான்றுகள் இல்லை.

அகழ்வாராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவ்வப்போது கைப்பிரதிகள் பாப்பைரஸ் ஏடுகள் மற்றும் தேரல் சுருள்களின் வடிவில் கிடைத்துக் கொண்டே இருப்பதனால் இவை இன்னும் முற்றுப்பெறாததாகவேதான்

உள்ளன.

காகிதச்சுவடி ஆய்வுகள்

383