உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சீனாய் கிரேக்கப் பிரதி. வாட்டிக்கன் கிரேக்கப் பிரதி ஆகிய இரு பழம்பெரும் பிரதிகளுக்கும் சுமார் 300 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தன இந்தச் சவக்கடல் சுருள்கள். மேலும், இவை பரம்பரை எபிரேயப் பிரதியைப் பெரும்பாலும் ஒத்துக் கொள்கின்றன. சிலவிடங்களில் வழக்கமான எபிரேயப் பிரதியின் வாசகத்தை மாற்றிச் செப்துவஜிந்துப் பிரதியை ஏற்கின்றன. முராப. 'அத் நீரோடை' அருகே கண்டுபிடிக்கப்பட்ட பாப்பைரி கி.பி.312ஆம் ஆண்டுக் காலத்திய லூசியன் கிரேக்கப் பிரதியையும் தழுவுகின்றன. இங்ஙனம் காணப்படும் வேறுபாடுகளுக்குக் காரணம் அறிவது எளிது. வாசகம் இதுதான் என்று வரையறுக்கப்படவில்லை. வாசகத்தை நிர்ணயிக்கும் இலக்கை நோக்கி நகரத் தொடங்கி விட்டனர். திருமறையின் அடிப்படைக் கொள்கையைப் பாதிக்கும் அளவுக்கு எந்தச் சவக்கடல் சுருளும் இடந்தரவில்லை,

புதிய ஏற்பாட்டு ஏடுகள்

எகிப்து நாட்டின் தட்பவெப்ப நிலை பாப்பைரஸ் ஏடுகளை மிகப் பத்திரமாகச் சேமித்து வைப்பதற்கு உதவியுள்ளது.

யோவான் நற்செய்தியின் பழைய பகுதிகள். 18 : 31-33. 37. 38 ஆகியவை கி.பி. 150ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. மிகப் பழைய ஏற்பாட்டுப் பாப்பைரஸ் துண்டு 2 பா.23 : 24-24 : 3: 25: 1-3:26: 12. 17-19: 28:31-33 ஆகும். இவை கி. மு. 150ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. மேலும், கி. பி. இரண்டு முதல் நான்கு நூற்றாண்டளவில் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டின் ஒன்பது நூல்களும். புதிய ஏற்பாட்டின் பதினைந்து நூல்களும். தள்ளுபடியாகமத்தைச் சேர்ந்த ஏனோக்கு நூலும் சர்.ஆல்பிரைட் செஸ்டர் பியட்டி என்பவரால் வாங்கப்பட்டன. அவர் பெயரையே இப்பிரதிகள் இன்றும் தாங்குகின்றன.

போட்மர் (Bodmer) பாப்பைரி சுமார் கி. பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. லூக்கா. யோவான் I. பேதுரு ஆகிய நூல்கள் இதுகாறும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை ஆதாரமாக வைத்துச் சீனாய். வாட்டிக்கன் கிரேக்கப் பிரதிகளின் பாடத்தைப் புனர் பரிசீலனை செய்ய வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது.

திருமறை நூல்களைத் தவிர வேறு சில நூல்களும் கிடைத்துள்ளன. கிரீன்ஃபெல், ஹண்ட் ஆகிய இருவர் கி. பி. 1896இல் ஆக்சிரின்ச்சிஸ் என்னுமிடத்தில் 'கிறிஸ்துவின் உரைகள்' என்ற கி. பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூலைக் கண்டுபிடித்தனர். இந்த உரைகள் வேத அடிப்படையில் எழுந்தவை. சில விளக்கங்கள் ஆகும்: சிந்தனையினின்றும் சில போந்தன. இன்னும் சில கிறிஸ்துவின் உரைதானா என்ற ஐயத்தையும் தோற்றுவிக்கும். அப். 20: 35இல் லூக்கா. நான்கு நற்செய்திகளும் கூறாத கிறிஸ்துவின் உரையைக் கூறுகின்றார். எனவே, இத்தகைய இயேசுவின் உரைகள் அனைத்தும் போலியா. உண்மையா என்று முடிவு கட்டுவதற்குப் போதிய ஆராய்ச்சியும். நிதானமும். பக்தியும் தேவைப்படுகின்றன. கிறிஸ்துவின் போதனையைச் சற்று மெருகு கூட்டியிருக்கலாம். எகிப்தில் 2ஆம், 3ஆம். நூற்றாண்டுகளில் நிகழ்த்தப்பட்ட அருளுரைகளின் பாணியில் இவை எழுதப்பட்டிருக்கலாம். மத்தேயுவும். லூக்காவும் பார்த்து எழுதிய பாகமாயும் காகிதச்சுவடி ஆய்வுகள்

382