உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1.

ஒழுங்குச் சட்ட நூல்

2. நன்றிச் சங்கீதங்கள்

لي

4.

5.

ம்

ஒளியின் பிள்ளைகளுக்கும். இருளின் பிள்ளைகளுக்கும் நடக்கும்

போர்

செம்புச் சுருள்

ஆபகூக் விளக்க நூல்

6. ஏசாயா சவக்கடல் சுருள்கள்

7.

ஆதியாகம விளக்கக் கதைகள்

முதலியன மிக முக்கியமான சவக்கடல் சுருள்களாகும்.

அகழ்வியலும் திருமறையின் பிரதிகளும்

பண்டைய இலக்கியமும். இலக்கியத்தின் பல்வகைகளும். அவற்றின் வடிவங்களும், சொல்லும் முறையும், சொல்லப்பட்ட சந்தர்ப்பச் சூழ்நிலையும் திருமறை ஆராய்ச்சிக்குப் புதுப்பொலிவு தந்துள்ளன. பாபிலோனிய புராணங்கள். கானானிய நெடுங் கதைகள், கடவுளை அரசனாகப் பாவிக்கின்றன. இவற்றை எபிரேயர்கள் சில சங்கீதங்களிலும். தீர்க்கதரிசன நூல்களிலும் எடுத்தாண்டிருக்கின்றனர். மெசப்பத்தோமியப் புலம்பல் சங்கீதங்கள். மந்திர உச்சாடனங்கள். எதிர் மந்திர உச்சாடனங்கள். திருமறையின் புலம்பல் சங்கீதங்களுக்குப் புதுப்பொருள் தருகின்றன. இஸ்ரவேலர். எந்தெந்த விதங்களில் கடன் வாங்கத் தயங்கவில்லை என்பதும். எந்தெந்தக் கருத்துக்களை நிராகரித்தனர் என்பதும் விளங்குகின்றது. கில் கமேஷ் புராணம். அக்ஸாட். கேரட் நெடுங்கதை. பாகால் புராணம் திருமறையின் இலக்கியத்தை. இலக்கிய நடையை விமர்சிக்கத் துணைபுரிகின்றன.

பாடபேதங்கள் ஏற்படும் பகுதிகளில் ராஸ்-ஷாம்ரா ஏடுகளின் துணையைக் கொண்டு மூலபாடத்தை நிர்ணயிக்க முடியும். பழைய ஏற்பாட்டில் பலவிடங்களில் ஒரேமுறைதான் ஒரு சொல் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதற்கு 'ஹபக்ஸ் லெகோமெனன் எனப் பெயர். இத்தகைய சொற்களுக்குப் பொருள் கோடல் எளிதன்று. ஆனால் இதே சொற்கள் வேறு ஏடுகளில் காணப்படுவதனால் அவற்றின் பொருளை நிரூபிப்பது சிரமமன்று. விளங்கிக் கொள்ள முடியாத. கடினமான சொற்களுக்கும் இவ்வழிகளில் செம்பொருள் காணலாம். ஒரு காலத்தில் செப்பம் (Emendation) செய்தல் மூலம் சில வாசகத்தை நிர்ணயித்து வந்தனர். ராஷ்-ஷாம்ரா ஏடுகள் இவ்வாறு செப்பம் செய்வது சரியன்று என்றும், மஸ்ஸோரா ஏடு (Masoretic Text - பரம்பரை எபிரேய பாடம்) சிறந்தது என்றும் பலவிடங்களில் நிரூபித்துள்ளது,

கும்ரான் சுருள்கள். அதாவது சவக்கடல் சுருள்கள் மக்கபேயர் காலத்திலிருந்து எருசலேம் நகரின் அழிவுவரை (கி.பி. 70) எஸ்ஸீனர் என்னும் யூத சமய உட்பிரிவினர் தம் அறநெறி, யுக இறுதிக்கால நம்பிக்கைகள். திருமறையை அர்த்தப்படுத்திய பான்மை. இயேசு கிறிஸ்துவின் காலத்திய இறையியல் ஆகியவற்றை விளக்குகின்றன. திருமறைப் பகுதிகள் எஸ்ஸீனரிடமும் இருந்தன. இவற்றிற்கும். இன்றுள்ள எபிரேயப் பிரதிக்கும் உள்ள பேதங்கள் முக்கியம் வாய்ந்தன. காகிதச்சுவடி ஆய்வுகள்

381