உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுதப்பட்டுள்ளன. தோற்பகுதிகள் நடுவிலே தைக்கப்பட்டு ஒரு சுருளாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதைப்போலப் பப்பைரஸ் நாணல் தாள் போன்ற ஒருவிதக் காகிதம் நடுவில் ஒட்டப்பட்டுச் சுருளாக்கப்பட்டுள்ளன. விவிலியத்திலுள்ள ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் இப்படி எழுதப்பட்டுள்ள மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இது மொத்தம் 24.5 அடி நீளமும், 105 அங்குல உயரமும் உள்ளதாகும். இப்படியாகப் பழைய ஏற்பாட்டின் பகுதிகள் சுமார் 190 கைப்பிரதிகளாகக் கிடைத்துள்ளன. இவை யூதேயாவின் பாலைவனத்தில் உள்ள குகைகளிலும், கும்ரான். வாதி முராதபாத். நகால் ஹுவர் குகைகளிலும், முஸாதாக் கோட்டையிலும் இருந்து கிடைத்துள்ளன.

கி. மு 1 ஆம் நூற்றாண்டு வரை இரண்டுவிதமான எழுத்துக்கள் காணப்படுகின்றன. ஒன்று வளைவுகள் அதிகம் கொண்ட 'பாலியே-எபிரேயம்' (Paleo - Hebrew) என அழைக்கப்படும் எபிரேய எழுத்துக்கள். இவை கானானிய எழுத்துக்களோடு அதிகமாக ஒத்துப் போகின்றன. பிற்காலத்தில் இவையே அரமேய எழுத்துக்களாக வடிவம் பெற்றுள்ளன.

கும்ரான் பிரதிகள்

கும்ரான் குகைகளிலிருந்து 14ஆம் எண் குகை) சுமார் 100 சிதைந்த நிலையிலுள்ள கைப்பிரதிகள் கிடைக்கப் பெற்றன இவை பல காலகட்டங்களில் எழுதப்பட்டவையாகும் இவற்றின் காலம் சுமார் கி. மு. 250 முதல் கி. பி. 68 வரை எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழைய ஏற்பாட்டின் பிரதிகளில் 'தானியேல்' மற்றும் 'அரசர்கள்' புத்தகங்களின் பிரதிகள் மட்டும் 'பைப்பைரஸ்' எனும் நாணல் தாள்களிலும் மற்றவை தோல் சுருள்களிலும் எழுதப்பட்டுள்ளன. இவற்றின் அமைப்பில் சிலவற்றில் வரிக்கு 15 முதல் 70 எழுத்துக்கள் வரை எழுதப்பட்டுள்ளன.

இவ்விதமான ஆராய்ச்சிகளுக்கு அகழ்வாராய்ச்சிகள் மிகவும் துணைபுரிகின்றன. அக்காடியர்களின் ஏடுகளில் காணப்படும் கில்காமிஷ் புராணம். மாதுக் தெய்வத்துக்கும். தியாமத்துக்கும் உள்ள போர். உயர இருந்து' என்று தொடங்கும் பாபிலோனியப் படைப்புப் புராணம் - இவையெல்லாம் புத்தாண்டின் போது வசந்த விழா ஆராதனைப் பாடல்களாயிருந்தன. இவற்றை அகழ்வாராய்ச்சியாளர்கள் அஷூர்-பானிபல் நூலகத்தில் கண்டெடுத்தனர். எனினும் கருத்தாலும், மொழி நடையாலும் கி. மு. 2000ஆம் ஆண்டிலேயே இவை இருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.

கி. பி. 1893இல் சார்லஸ் எட்வின் வில்பரால். நீலநதியில் அஸ்வானுக்கு எதிரே 'யெப்'தீலில், 'எவிபத்தின் ஏடுகள்' கண்டுபிடிக்கப்பட்டன. இவை எகிப்தில் குடியேறிய யூதரால் எழுதப்பட்டவை. இவர்கள் பார்வோன் கொப்ரா (கி. மு. 588- 569) அல்லது அமாசிஸ் (கி. மு. 569-525) காலத்தில் குடியேறினர். காம்பிசஸ் எகிப்தைப் பிடித்து (கி.மு.525) இணைத்துக் கொண்ட பின்னர், யூதர் நிலைமை மோசமானது.

கிர்பெத் கும்ரான், அயின் ஃபெஸ்கா என்னும் இடங்களில் (கி. பி. 1947) முகம்மத்-எத்-தீப் என்னும் அமிரா இனத்தைச் சேர்ந்தவன், சவக்கடல் சுருள்களைக் கண்டுபிடித்தான். இவை எஸ்ஸீனர் எனும் குழுவினரால் சிறப்பாக எழுதப்பட்டவை. கிறிஸ்துவின் காலத்திய பக்திச் சூழ்நிலையை உணர இச்சுருள்கள் உதவுகின்றன.

380

காகிதச்சுவடி ஆய்வுகள்