உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தா. வின்சென்ட் தென்னிந்தியத் திருச்சபை தஞ்சாவூர்

கிறித்தவத் திருமறை அகழ்வாராய்ச்சி, கையெழுத்துப்பிரதி

மாக்களாய் இருந்த மக்கள் மீண்டும் மனிதத்துவம் பெறுவதற்கு உதவியாய் இருப்பவை சமயங்கள். அச்சமயங்கள் மக்களை நல்வழிப்படுத்துவதற்குப் புனித நூல்கள் உள்ளன. ஒவ்வொரு சமயத்தினரும் தங்கள் புனித நூற்களை. இறைவெளிப்பாடுகளாகவே கருதுகின்றனர். அவ்வண்ணமாகவே கிறித்தவர்களும் தங்கள் புனித நூலாம் விவிலியத்தை இறைவனுடைய புனித ஆவியின் வெளிப்பாடாகவே கருதுகின்றனர். இவ்விவிலியத்தில் இருபெரும் பிரிவுகள் உள்ளன. பழைய, புதிய ஏற்பாடு எனும் பிரிவினிலே மொத்தம் 66 புத்தகங்கள் அடங்கியுள்ளன. இவையனைத்தும் பல்வேறு நபர்களாலே. பல்வேறு காலகட்டங்களில். சூழல்களில். பண்பாடுகளிலே எழுதப்பட்டவைகளாகும். இவை எழுத்து வடிவம் பெற்ற காலம் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஆனால் அனேக ஆண்டுக் காலமாக வாய்மொழியாக வந்த இவ்விவிலியத்தின் பகுதிகள் பல்வேறு நபர்களால் எழுதப்பட்டுப் பிறகு தொகுக்கப்பட்டன. இவை எபிரேயம். கிரேக்கம். அரமேய மொழிகளில் எழுதப்பட்டன. 1920ஆம் ஆண்டு சவக்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில 'பப்பைரஸ்' என அழைக்கப்படும் ஒருவிதமான புற்களினால் செய்யப்பட்ட ஏடுகளில் எழுதப்பட்ட சில பகுதிகளும். 1947ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 'சவக்கடல் தோற்சுருள்களில்' எழுதப்பட்ட பகுதிகள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தற்சமயம் எந்தவொரு பழைய ஏற்பாட்டு நூலும் ஆக்கியோர் கையினால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதி கிடைக்கவில்லை. மாறாகப் பிற்காலத்தில் - கையெழுத்துப் பிரதிகளை எழுதிய, அதாவது பிறர் வாய்மொழியாகக் கூறக் கேட்டு எழுதிய வேத பாரகர்கள் என்பார் எழுதிய கையெழுத்துப் பிரதிகளே உள்ளன. எபிரேயர்கள் பாபிலோனியச் சிறையிருப்பில் சென்ற காலத்திற்கு 587 - 539 கி. மு.) முன் எந்த ஒரு பழைய ஏற்பாட்டின் புத்தகமும் முழுமையாகத் தொகுக்கப் பட்டதாகவோ. எழுதப்பட்டுக் கிடைத்ததாகவோ சான்றுகள் இல்லை. இன்று கிடைத்துள்ள மிகப் பழமையான கைப்பிரதிகள் 'கும்ரான் குகைகளிலிருந்து கிடைத்துள்ள. சவக்கடல் சுருள்கள் கி. மு. 250 - 175 ஆண்டுகளைச் சேர்ந்ததாகும்.

கி.

மிகப் பழமையான கைப்பிரதிகள் எனக் கிடைக்கப்பட்டுள்ள பல பிரதிகள் மு. 250 - கி.பி. 135 வரை உள்ள காலகட்டத்தைச் சேர்ந்தவை. இவற்றில் பலவும் தோற்சுருள்களில் ஒருபக்கத்தில் மட்டும். பத்திகளாகப் பிரிக்கப்பட்டு

காகிதச்சுவடி ஆய்வுகள்