உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3.

சந்தனம் அகிலும் வேம்பும்

தனித்தனிக் கந்தம் வீசும்

அந்தணர் தீயில் வெந்தால்

அதுமணம் வேற தாமோ

செந்தலைப் புலையன் வெந்தாற்

தீமணம் வேற தாமோ

பந்தமும் தீயும் வேறோ

பாச்சலூர்க் கிராமத் தாரே!

இவ்வாறு. பத்துப் பாடல்களில் உலகத் தத்துவத்தின் உட்பொருளை. அறியாமை இருட்டில் உழன்று கொண்டிருக்கும் பாச்சலூர்க் கிராம மக்களுக்கு அள்ளி வழங்குகிறார் புலவர். இவரது மானுட நேயத்தின் மதிப்புத்தான் எவ்வளவு பெரிது? இந்நூலகத் தாள் சுவடித் தனிப்பாடல்களில் மேற்சொன்னவை மட்டுமன்றி, பல புலவர்கள் பாடிய சிலேடைப் பாக்களும், வருணனைப் பகுதிகளும், பல்வேறு தெய்வங்களின்மீது இறைநெறிப் பாடல்களும், வள்ளல்கள் பலர்மீது சீட்டுக்கவிகளும். வண்ணச் செய்யுட்களும். சந்தச் செய்யுட்களும், இவை தவிர்த்த சோதிடம். பத்திப் பாடல்களும் கற்றோர்க்குக் கழிபேருவகை அளிக்கும் இன்கவித் திரட்டுக்களாம். முடிவுரை

சுமார் கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளுள் தமிழுலகில் வாழ்ந்து இலக்கிய நயம் நிறைந்த பலவகைச் செந்தமிழ்ப் பாடல்களியற்றிய சிறந்த பாவலர்களது தேர்ந்தெடுத்த அரிய கவிகள் இந்நூலகத் தாள் சுவடிகளில் இடம்பெற்றுள்ளன. பல கவிகளுக்கு அவற்றினை இயற்றிய ஆசிரியரின் பெயர் கண்டறியப்பட்டுக் குறிக்கப் பெற்றுள்ளன. இப்பாடல்களின் ஆசிரியர்கள் பல சமயங்களையும், பல மரபுகளையும் சார்ந்தவர்கள். பல்வேறு வகைப்பட்ட அரும்பொருள்களைப்பற்றி அவர்கள் பாடியுள்ளனர். அவர்களின் பாடல்களால் பல வள்ளல்களின் பெயர்கள் அறியவருகின்றன.

இதன்கண். பல தெய்வங்களைப் பற்றிய துதிகள், உலகியலைப் படம் பிடித்துக் காட்டுவது போன்ற உலோபிகளின் இயல்பு. வறுமையின் அல்லல். கள். ஊன் உண்பாரது இயல்பு. துறவிகளின் வஞ்சக ஒழுக்கம், அகத்துறை நயங்கள் முதலிய அரும்பல பொருள்களின் வருணனை இயற்கையை இற்றெனக் கிளக்கும் சிறப்பு வாய்ந்திருப்பன. மேலும். வாய்மை, பணிவு. அன்பு. தீரம். தூயமனம், பக்தி முதலிய நல்லொழுக்க நெறிகளும் பல பாடல்களின்வழி அறியப்படுகின்றன.

ஒரு காப்பியத்திற்கு எவ்வளவு மதிப்புண்டோ அதற்குச் சிறிதும் குறையாத மதிப்பு. தனிப்பாடல்களுக்கும் உண்டென்பது தெளிவு. தனிப்பாடலை அதன் சிறப்பு நோக்கித் 'தனியன்' என வைணவ நூல்கள் வழங்கும். எனவே. தனிப்பாடல்களைத் தனித்து வேறுபடுத்தி நோக்காமல், அதுவும் ஓர் இலக்கியம்தான்: மக்களை நெறிப்படுத்தும் ஒரு வாழ்வியற் பெட்டகம்தான் என்றுணர்ந்து வருங்காலத் தமிழ்ச் சமுதாயத்தினர். தமிழ் ஆய்வறிஞர்கள் ஆகியோர் பல்வேறு சுவடி நூலகங்களிலுள்ள ஓலை மற்றும் தாள் சுவடிகளிலுள்ள தனிப்பாடல்களைத் திரட்டி நூலாகக் கொண்டு வருவாராயின் தமிழ்ப் பண்பாடு அழிவிலிருந்து காக்கப்படும் என்பது துணிபு.

378

காகிதச்சுவடி ஆய்வுகள்