உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கோப்பான குறவர்தலை சாரையில் நுழைந்துபோய்க் குடிசைக் குள்ளே புகுந்து

கூழெலாந் தின்றுவிளை யாடிவரு குக்கலே! கூறுவிண் ணப்ப மொன்று

சாப்பாடில் லாமலே பெண்டிதனை யூரிலே தான்வழங் கத்தொ டுத்துச்

சல்லியும் பில்லியுங் கல்லியுஞ் சொல்லியே சாண்வயறு தான்வ ளர்க்குந்

தீப்பாக யாஞ்சவுந் தரபாண்டி யன்மதலை செந்தலைப் புலைய னாகும்

செத்தநாய் தின்றுவளர் சித்திநா யகமட்டி சீண்டலை மிகக் காக்கவே"

இப்பாடலிலிருந்து சிட்டநாதன் என்னும் வள்ளல். மங்கைபாகக் கவிராயரை ஆதரித்து அன்பு பாராட்டி மகிழவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அக்காலப் புலவர்கள். தன்னை மதித்து ஆதரிக்கும் மன்னனையோ அல்லது வள்ளலையோ புகழ்ந்து கவிகள் பல படைப்பது போன்றே. தம்மை ஆதரிக்காதோரையும் பழித்துக் கவிகள் பாடியிருப்பதை இதுபோன்ற தனிப்பாடல்களின்வழி அறியமுடிகின்றது.

அறிவுரைத் தத்துவக் கவிகள்

தனிப்பாடல்கள் பெரும்பான்மையன. மக்களுக்கு அறவுரை தரும் பாங்கினதாக அமைகின்றன. நல்லது செய்தல் வேண்டும்; அல்லது (தீமை) களைதல் வேண்டும் என்பதே மாந்தர்க்கு மன்பதைப் புலவர்கள் தரும் அறிவுரையாகும். மானுடம் எங்கெல்லாம் காயப்படுகின்றதோ. அங்கெல்லாம் புலவர்கள் தோன்றி அவற்றைக் களைந்தெறிந்து குணப்படுத்தும் காவலர்களாகவும் விளங்கியிருப்பதைப் பல்வேறு தனிப்பாடல்களிலிருந்து அறியமுடிகின்றது. மக்களாகப் பிறந்தும் அறிவிழந்து. மூடநம்பிக்கைகளில் மூழ்கி வாழும் பாச்சலூர்க் கிராமத்தாரைப் பார்த்து ஒரு புலவர் பின்வருமாறு பாடுகின்றார்.

1. வித்தொரு மரத்தை யீனும்

மரமொரு வித்தை யீனும்

பெத்ததாய் பிள்ளை மீனும்

பிள்ளையு மதுவே யீனும்

உத்தப்பால் தயிரை மீனும்

உயர்ந்ததாய் குழந்தை யினும்

பத்திநன் நுலைவ தேதோ? பாச்சலூர்க் கிராமத் தாரே!

2. ஒருபனை யிரண்டு பாளை

ஒன்றுநொங் கொன்று கள்ளு அறிவுடன் கொள்ளு வோர்க்கு

அதுவுங் கள்இது வுங்கள்ளே

ஒருகுல முயர்ந்த தேதோ?

ஒருகுலந் தாழ்ந்த தேதோ? பறையனைப் பழிப்ப தேதோ? பாச்சலூர்க் கிராமத் தாரே!

காகிதச்சுவடி ஆய்வுகள்

377