உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

வீ.மலர்விழி

ஆய்வாளர்

அரிய கையெழுத்துச் சுவடித்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

ஆவணங்களில்

தஞ்சை மராத்திய அரசியர்

தஞ்சை மராத்திய அரசியர்களைப்பற்றி அறிந்து கொள்ள ஆவணச் சான்றுகள் பெரிதும் துணைபுரிகின்றன. ஆவணங்களில் மராத்திய அரசியர்களின் வாழ்க்கை முறைகள், மற்றும் அவர்களின் அரசியல் பணிகள். சமயப் பணிகள். அறக்கொடைப் பணிகள். அவர்களின் பெயர்களில் அமைக்கப்பட்ட சத்திரங்கள் போன்றவை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவ்வரசியர்களைப்பற்றி அறிந்து கொள்ள மோடி ஆவணங்களே பெரிதும் துணைபுரிகின்றன.

தஞ்சை மராத்திய முதல் அரசரான ஏகோஜிக்குத் தீபாம்பாள், அண்ணுபாய், சயிராபாயி என்று மூன்று மனைவியர் இருந்தனர்.

"1776 கைலாஸவாஸி ஏகோஜிராஜா சம்சாரம் கங்காபாய் பரலோகம் அடைந்ததற்கு உத்திரகிரியைக்கு 50 சக்கரம்'1

என்ற குறிப்பினால் ஏகோஜிக்குக் கங்காபாய் என்ற மனைவி இருந்ததை அறியமுடிகிறது..

ஏகோஜிக்கு அபிமானத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மனைவிகள் ஒன்பது பேர் ஆவர்.2 கங்காபாய் அத்தகைய மனைவியருள் ஒருவராக இருந்திருக்கலாம்

தீபாம்பாள்

தஞ்சாவூர் மராத்திய அரசின் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் அரசி தீபாம்பாள் ஆவார். தஞ்சாவூர் மராத்திய அரசர்களின் வாழ்வுக்கும், வரலாற்றுக்கும் ஓர் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவர் தீபாம்பாள். இவ்வரசி தீபாம்பாள் என்றும், தீபாபாய் என்றும் நூல்களில் கூறப்பெறுகின்றார்.

1. கே.எம் வேங்கடராமையா. தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும். ப 17

2

மோடி ஆவணத் தமிழாக்கம் தொகுதி 2. ப 79

காகிதச்சுவடி ஆய்வுகள்

385