உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இவர் 'இங்கிளே' என்ற குலமரபில் பிறந்தவர். இல்லற வாழ்வில் ஒற்றுமையாகக் கணவனுடன் வாழ்ந்தவர்3 ஆவார்.

கி. பி. 1728-1736 வரை ஆண்ட துக்கோஜிக்கு அருணாபாயி, ராஜகுமாரபாயி. மோஹனாபாயி. மஹினாபாய், லெக்ஷ்மிபாய் ஆகிய மனைவியர் இருந்தனர்.4 இவரால் சேர்த்துக் கொள்ளப்பட்டவர் அறுவராவர். இவ்வறுவருள் கத்தி வைத்துத் திருமணம் செய்து கொண்ட மராத்தியப் பெண் அன்னபூர்ணா ஆவார். அன்னபூர்ணாவின் மகள் சாமாபாய் ஆவார். கி.பி. 1776க்குரிய குறிப்பில் சாமாபாய் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

கி. பி. 1736-1737 வரை ஆண்ட இரண்டாம் ஏகோஜிக்குச் சுசான்பாய். ஜயந்திபாய். சக்வார்பாய். கிரிஜாபாயி. பார்வதிபாயி5 ஆகிய மனைவியர் இருந்தனர் இவரால் சேர்த்துக் கொள்ளப்பட்டவர் மூவர் ஆவர்.

சுசான்பாய்

தஞ்சாவூர் மராத்தியர் ஆட்சியிலே அரியணையில் அமர்ந்த ஒரே பெண்ணரசி சுசான்பாய் ஆவார் தமக்கு மகப்பேறு இல்லாததால் தம் கணவரின் இறப்பிற்குப் பின்பு தர்மே அரியணையில் அமர்ந்து வரலாறு படைத்தார். 5 ஏகோஜியின் ஆறு மனைவிகளில் சுசான்பாய் மூத்த அரசியாவார். ஏகோஜி 1736இல் இறந்த பின்பு சுசான்பாய் அரியணை ஏறினார். கி. பி. 1857இல் கடைசி சிவாஜியின் மூத்த மனைவியாகிய காமாட்சியம்பாபாயி ஜான் புரூஸ் நார்ட்டன் என்பவரைக் கொண்டு சென்னை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தபொழுது அவ்வழக்கறிஞர் கூற்றின் மூலம் இதையறிய முடிகிறது.'

கி.பி. 1739-1763 வரை ஆண்ட பிரதாபசிம்மர்க்கு ஓராவணக் குறிப்பினால் யமுனாபாயி, சக்வார்பாயி ஆகிய இருவர் பெயர் மட்டும் காணப்படுகிறது. பிரதாபசிம்மர் அகல்யாபாய், திரௌபதிபாய் ஆகியோரைத் திருமணம் செய்து கொண்டார். இவரால் சேர்த்துக் கொள்ளப்பட்டவர் எழுவர். அவர்களில் ஒருவர் கிருஷ்ணாபாய் சாகேப் ஆவார். மற்றவர்களின் பெயர்கள் தெரியவில்லை. இவருடைய சகோதரி சாமாபாயி ஆவார்.

கி.பி.1763-1873 வரை ஆண்ட இரண்டாம் துளஜா 14-11-1776இல் சுலட்சணாம்பாபாய், மோகனாபாய் என்ற இரு பெண்களைத் திருமணம் செய்து கொண்டார். பின் இராஜசபாயி. இராஜகுமாரபாயி, மோகனாசாகேப் ஆகியோரைத் திருமணம் செய்து கொண்டார். இவரால் சேர்த்துக் கொள்ளப்பட்டவர் நால்வர் ஆவர்.

வீ.சீனிவாசாச்சாரி, போன்ஸ்லே வம்ச சரித்திரம், ப 79.

3

என். சீனிவாசன், குலவிளக்கு தீபாம்பான், ப. 3.

4.

5.

6.

கே. எம். வேங்கடராமையா, மு. கா .நூல். ப: 19.

எஸ். இராஜலெட்சுமி, 'பாவாசாகேப் அல்லது இரண்டாம் ஏகோஜி'. சரசுவதி மகால் நூலக இதழ் தொகுதி 38. ப 10.

போன்ஸ்லே வம்ச சரித்திரம், ப. 19.

கே எம் வேங்கடராமையா, மு. கா. நூல். ப. 22.

போன்ஸ்லே வம்ச சரித்திரம், ப. 80

7

8.

9

10

மேலது.ப 125.

386

காகிதச்சுவடி ஆய்வுகள்