உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரண்டாம் துளஜாவின் மனைவியான மோகனபாயிக்கு அப்துல்

பிரதாபசிம்மர் 1778இல் பிறந்தார். இவர் ஒருவரே ஆண் குழந்தையாக இருந்தமையால் இவரை மற்ற அரசமாதேவிகளும் தங்கள் குழந்தையாகவே போற்றி வளர்த்தனர். இரண்டாம் துளஜாவின் மனைவி இராஜகுமாரபாய் என்பவருக்கு அபரூபாயி என்ற மகளும் உண்டு. இந்த அபரூபாயிக்கு மாருதிசாமி என்ற ஒரு பிள்ளையும், சாந்தாபாயி என்ற மகளும் பிறந்தனர். இவர்களை விட்டு அபரூபாயி இறந்து போனார். இவ்விரு குழந்தைகளும் அப்துல் பிரதாபராஜா இறந்த ஆண்டிலேயே இறந்தனர். தமக்குப் பின் அரசாளப் பிறந்த மகன் இறந்து விட்டதால் தம் தாயாதிகளுக்குள் ஒருவராகிய சரபோஜியைத் தத்தெடுத்துக் கொண்டார் என்பதைக் கி. பி. 1784க்குரிய குறிப்பு தெரிவிக்கிறது." திரௌபதாம்பாபாய் சாகேப் இரண்டாம் துளஜாவின் தாய் ஆவார்.

கி. பி. 1787-1798 வரை ஆண்ட அமர்சிங்கிற்குக் கி. பி. 1776இல் கிருஷ்ணாம்மாபாய் திருமணம் செய்விக்கப்பெற்றார். இவரது இரண்டாவது மனைவி பார்வதிபாயி ஆவார்.12 மற்றொரு மனைவி பவானிபாய் ஆவர். யமுனாபாய் என்பவர் அமர்சிங்கரின் மகளாவார்.

கி.பி. 1832-1855 வரை ஆண்ட கடைசி சிவாஜி ஒரே நாளில் 17 பாயிமார்களைத் திருமணம் செய்து கொண்டார். சென்னைப் பட்டணம் உச்சநீதி மன்றத்தில் காமாட்சியம்பாபாயி சாயேப் கும்பினியாரையும். மற்ற பாயிமார்களையும் பிரதிவாதிகளாக்கி கி. பி. 1857இல் ஒரு வழக்குத் தொடுத்தார். நார்ட்டன் என்ற வழக்கறிஞர் ஒப்பமிட்டுள்ள 20-04-1857 தேதியிட்ட ஓராவணத்தில் பின்வரும் 10 பாயிமார்கள் பெயர்கள் உள்ளன.

6.

ராஜகுமாரம்பாபாய்

7. சுகுணாம்பாபாய்

1.

சையம்பாபாய்

2.

உமாம்பாபாய்

3.

ஜயதம்பாபாய்

8. அபரூபாம்பாபாய்

4.

ஜிகாயிபாயி

9. யசவந்தம்பாபாய்

5.

தீபாம்பாபாய்

10. அனசம்பாபாய்

ஆகியோர் ஆவர் 13

காமாட்சிபாய் சாகேப்

"இரண்டாம் கல்யாணம் மாப்பிள்ளை

எசவந்தராவ்

ராமச்சந்திரராவ் சூர்வே பெண் காமாட்சியம்பா கல்யாணம்"

என்ற குறிப்பின் மூலம் கடைசி மன்னராகிய கடைசி சிவாஜியின் பட்டத்தரசி காமாட்சிபாய் சாகேப் என்றறியமுடிகிறது. இவர் காலத்தில் சரசுவதி மகால் நூல்

சரசுவதி மகால் மோடித் தமிழாக்கம் தொகுதி 2.

11

12.

கே எம். வேங்கடராமையா. மு. கா. நூல், ப 27

13

மேலது. ப 33

14.

மேலது. ப. 316.

காகிதச்சுவடி ஆய்வுகள்

387