உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நிலையத்தைச் சென்னைக் கீழ்த்திசைச் சுவடியகத்தில் சேர்க்க வேண்டுமென்று அந்நாளில் கருதினர். அப்பொழுது காமாட்சிபாய் சாகேப் ஜான்புரூஸ் மார்ட்டன் வழி வழக்காடி இந்நூலகத்தைச் சென்னைக்கு மாற்றாமல் தஞ்சாவூரிலேயே இருக்குமாறு செய்தார். இதற்காகக் காமாட்சிபாய் சாகேபுக்கு ஆராய்ச்சியுலகு நன்றி செலுத்தும் கடப்பாடு உடையது.15

உடன்கட்டை என்ற சதி

கணவன் இறந்த பின், மனைவி உடன் உயிர் நீப்பதற்கு உடன்கட்டை ஏறுதல் என்று பெயர் இதனைச் 'சதி' என்றும். 'சககமனம்' என்றும் கூறுவர்.

தஞ்சை மராத்தியர் காலத்தில் மராத்திய அரசர்களின் மாதேவிகளில் சிலர் உடன்கட்டை ஏறினர் என்று போன்ஸ்லே வம்ச சரித்திரம் கூறுகிறது. மேலும் 1728- 1829 வரை தஞ்சாவூரில் நடைபெற்ற உடன்கட்டை ஏறிய சில பெண்களைப்பற்றி மோடி ஆவணம் மூலம் அறியமுடிகிறது.

முதலாம் சரபோசி 1710 முதல் 1728 வரை ஆட்சி செய்து இறந்தபோது அவருடைய மூன்று மனைவிகளில் சுலட்சணாபாயி சாகேபும். ராஜஸபாயி சாகேபும் உடன்கட்டை ஏறினர் என்பதைச் சான்றுகள் மூலமாக அறியமுடிகிறது. 16

கி. பி. 1739 முதல் 1763 வரை ஆட்சி செய்தவர் பிரதாபசிங்கர் ஆவர். அவருக்கு மனைவியர் ஐவரில் மன்னர் சகம் 1763இல் இறந்தபொழுது அவருடைய மூன்றாவது மனைவியான யமுனாபாயி சாகேபும். ஐந்தாவது மனைவியான சக்வார்பாயி சாகேபும் உடன்கட்டை ஏறினர் என்பதைச் சான்றுகள் மூலம் அறியமுடிகின்றன. 17

1735இல் துளஜா மன்னர் இறந்தபோது அவரது மனைவி இராசகுமாரம்பா உடன்கட்டை ஏறினார் என்றொரு குறிப்புரையும் காணப்படுகிறது. ஆனால் இச்செய்தி போன்ஸ்லே வம்ச சரித்திரத்தில் குறிப்பிடப்படவில்லை.

அமர்சிங்கர் கி. பி. 1802இல் இறந்தபொழுது அவரது இரண்டு மனைவியர் மத்தீ புகுந்து உயிர் மாய்ந்தனர் என்று கூறப்படுகிறது.1

அரசியல் பணிகள் தீபாம்பாள்

18

ஏகோஜி மன்னர் தஞ்சாவூரை ஆட்சி செய்தபோது ஏகோஜிக்கும் அவரது சகோதரர் சிவாஜிக்குமிடையே கருத்து வேறுபாடு தோன்றியது. அறிவுக் கூர்மையும், திறமையும் பெற்ற தீபாம்பாள் தம் கணவரிடம் 'சிவாஜியுடன் ஓர் உடன்படிக்கை' செய்து கொள்ள வேண்டுமென்று கூறி ஏகோஜியை இசைவு பெறச் செய்தார். ஏகோஜி தீபாம்பாளிடம் ஆலோசனையைப் பெறாமல் இருந்திருந்தால் சகோதரர்களிடையே

15. தஞ்சை மராட்டிய அரசர் மோடி ஆவணக் கருத்தரங்கு. 1983. ப 5

16 கே எம் வேங்கடராமையா, மு. கா. நூல்.. 317.

17

போன்ஸ்லே வம்ச சரித்திரம். ப 116

18 கே எம் வேங்கடராமையா மு.கா. நூல். ப 318

388

காகிதச்சுவடி ஆய்வுகள்