உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஏற்பட்ட மனக்கசப்பான காரணத்தினால் போர் ஏற்பட்டிருக்கலாம். இரு திறத்தினருக்கும் நன்மை ஏற்படும் ஆலோசனையைக் கூறிய பெருமை தீபாம்பாளையே சாரும்.

சுஜான்பாய்

தம் கணவர் இரண்டாம் ஏகோஜி இறந்தபின் சுஜான்பாய் சுதந்திரமாகத் தஞ்சாவூரை ஆண்டார். இவர் ஆண் உடை தரித்து உடைவாள் ஏந்திக் கர்நாடக நவாப் தஞ்சாவூர் மீது படையெடுத்தபோது எதிர்த்து நின்று தானே கோட்டைக் காவலுக்கு வந்தார். கோட்டையை முற்றுகையிட்ட எதிரிகளோடு போரிட்டார். ஆனால் இறுதியில் கோட்டையைக் காவல் செய்த சில தளபதிகளும், சந்தாசாகிபின் மாமனாரான ஆற்காட்டு நவாபும் சேர்ந்து சதி செய்து இவரைச் சிறை செய்து கொன்றனர்.19

காமாட்சிபாயி

சிவாஜி ஒரே நாளில் 17 பெண்களை மணம் செய்து கொண்டார். ஆனால் யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை. அதன் பிறகு 1854இல் சிவாஜி அப்போது சென்னை மாகாணத்தின் ஆளுநராய் இருந்தவரிடம் லோகண்டேராவ் என்பவரை அனுப்பிச் சரபோசியின் மகள்வழிப் பேரனைத் தத்தெடுக்க அனுமதி தருமாறு கேட்டனுப்பி வைத்தார்.

கி. பி. 1855ஆம் ஆண்டு கடைசி சிவாஜி இறந்த பின்பு அரசியாயிருந்த காமாட்சியம்பாபாயி தனக்கு அரசுரிமை வேண்டுமென ஆங்கில அரசுக்கு எழுதினார். 20 ஆனால் ஆங்கிலேயர் தஞ்சாவூர் அரசை முழுமையாகத் தம் ஆட்சியின்கீழ்க் கொணர்ந்தனர். எனவே காமாட்சியம்பாபாயி சாகேப் கும்பினியாரையும் மற்றப் பாயிமார்களையும் பிரதிவாதியாக்கி 20-04-1857இல் நார்ட்டன் என்ற ஆங்கிலேய வழக்கறிஞரைக் கொண்டு வழக்குத் தொடுத்தார். நீண்ட நாள்களுக்குப் பிறகு ஆங்கில அரசு தனது தீர்மானத்தில் அரசு பரம்பரைக்கு உரிய கிராமங்கள், எஸ்டேட், சொத்துகள், சரசுவதி மகால், அரண்மனை, தர்பார் மண்டபம் ஆகியவைகளை விதவை அரசியான காமாட்சிபாய் சாகேப் சந்ததிக்கு உடைமை என்று கூறினர் எனக் கே. எம். வேங்கடராமையா கூறுகின்றார்.21

மற்ற விதவை மனைவியருடன் கலந்தாலோசித்து அரசி காமாட்சியம்பாபாய் சாகேப் சரபோசியின் மகள் சக்வாரம்பாபாயின் மகனான சரபோசி அரசரைத் (மூன்றாம் சரபோசி தத்தெடுத்துக் கொண்டார்.

காமாட்சிபாய் 1863இல் தத்தெடுத்தபோது ஜாதகர்மம், நாமகர்மம்.

அன்னப்பிரசானம் போன்ற சடங்குகளைச் செய்தார்.

19

20

தஞ்சை மராட்டிய அரசர் மோடி ஆவணக் கருத்தரங்கு. 1983. ப. 3.

பா. சுப்பிரமணியன் (ப.ஆ.). தஞ்சை மராட்டிய மன்னர். மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும் தொகுதி 2, ப. 14.

21.கே எம். வேங்கடராமையா. மு. கா. நூல். ப. 17.

காகிதச்சுவடி ஆய்வுகள்

$89