உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




,,22

"காமாட்சிபாயி தனது சுவீகார புத்திரனுக்காக செளல சூரிகா பந்தனம் செய்ததற்கான தட்சணை செலவுகள் பற்றிய விபரம்'

என்ற குறிப்பின் மூலம் இதை அறியமுடிகிறது.

பிற அரசியர்

பிரதாபசிம்மரின் மனைவி திரௌபதாம்பாபாயி கி. பி. 1798இல் சரபோசிக்கு அரசுரிமை கிடைக்க வழி செய்தவர் ஆவார். பிரதாபசிம்மரின் மனைவி யமுனாபாய் சாகேப், சக்குவார்பாயி சாகேப். மற்றும் சரபோசி மன்னரின் அகல்யாபாய் சாகேப் ஆகியோரின் அரசியல் பணி குறிப்பிடத்தக்கதாகும்.

சமயப் பணிகள்

கா

அரசியர்கள் அனைவரும் அரசியல் பணிகளைவிடச் சமயப் பணிகளில் அதிகமாக ஈடுபட்டுள்ளனர் என்பதை அறியமுடிகிறது. அதிலும் கோயிலுக்கென்று பல தானங்களையும், அணிகலன்களையும் கொடுத்துள்ளனர் என்பதை உணரமுடிகிறது. அரசியர்களில் பலர் அறக்கொடைகளைச் செய்துள்ளமையை மோடி ஆவணச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.23

“1756ல் லக்ஷம்பாயி சாயேப்புக்கு 'ஸர்வமான்யம்'

அக்ரஹாரத்திற்கும் தர்மத்துக்கும் மாதிரி மங்கலம் வகையறாவில் 133/4 COLON 1/2 LOIT""

என்ற குறிப்பினால் பிரதாபசிம்மர் தம் மாற்றாந்தாய்களுள் இலட்சுமிபாய்க்குத் தருமம் செய்ய நிலங்கள் அளித்த செய்தி தெரிகிறது.24

இராஜகுமாரம்பாபாயி சாகேப் இராஜகுமாரம்பாபுரம் சத்திரத்திற்கருகில் அக்கிரகாரம் கட்டினதற்குப் பாக்கி சக்கரம் 1798-8-3 என்ற குறிப்பின் மூலம் இராஜகுமாரம்பாயி அக்கிரகாரம் கட்டியது தெரிய வருகிறது.25

கார்த்திகைத் திங்களில் சோமவார விரதத்தைக் காமாட்சிபாய் சாகேப் கொண்டாடியதாக ஓராவணம் கூறுகிறது. இந்த விரதம் கார்த்திகை மாதம் 4ஆவது திங்கட்கிழமையில் இருப்பது மரபு. இன்றளவிலும் மக்கள் இந்த விரதத்தைப் பின்பற்றி வருகின்றனர்

கி.பி 1883ஆம் ஆண்டு புன்னைநல்லூரில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலிலுள்ள கொடிக்கம்பம் முழுவதும் பித்தளைத் தகட்டால் போர்த்தப்பெற்று அலங்கரிக்கும் பணியைக் காமாட்சிபாய் சாகேப் செய்துள்ளார்.26 மேலும் இதே கோயிலில் ஓவியங்கள் பொருந்திய மண்டபமும் அமைத்து 9 சிறிய கட்டிடங்களையும் அமைத்துள்ளார். இக்கோயில் ராஜகோபாலசுவாமி கோயிலுக்குள்ளேயே உள்ளது.2

22 பா. சுப்பிரமணியன் (ப ஆ. மு. கா. நூல் தொகுதி 2 ப 526. மேலது, தொகுதி 1. ப. 324.

23

24

25

26

போன்ஸ்லே வம்ச சரித்திரம், ப.81

பா சுப்பிரமணியன் (ப. ஆ). மு. கா. நூல் தொகுதி 1 ப 52

கே எம் வேங்கடராமையா மு. கா. நூல் ப. 315.

27 தஞ்சை மராட்டிய அரசர் மோடி ஆவணக் கருத்தரங்கு 1983, ப. 3

990

27

காகிதச்சுவடி ஆய்வுகள்