உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரண்டாம் சரபோசியின் மனைவி அகல்யாபாய் சோமவார சுலக்ஷணாம்பாபாய்

சாகேப்

அமாவாசையைக் கொண்டாடினார். 28 சுலக்ஷணாம்பாபுரம் அக்கிரகாரத்தின் பிராமணர்களுக்கும். கோயிலுக்கும் திருவிடைமருதூரில் அக்கிரகாரம் கட்டி அதற்குச் சுலக்ஷணாம்பாபூர் என்று பெயரிட்டுத் தமக்குச் சொந்தமான கோட்டூர்த் தோட்டத்தைக் கி. பி. 1842இல் தானம் செய்தார்.

அல்லாப் பண்டிகைக்குப் பகீர்களுக்குச் சைதம்பாபாயி சாகேப் ரூ 30: காமாட்சியம்பாபாயி சாகேப் ரூ 25; சுலக்ஷணாபாயி ராஜேசாகேப் ரூ 10: சக்வாரம்பாபாயிராஜே ரூ 10 ஆக ரூ 105 கொடுக்கப்பட்டது என்பதிலிருந்து அரசியர் அனைத்துச் சமயத்தினருக்கும் நன்கொடை வழங்கினார் என்று தெரிகிறது.29 அரசியர்களின் பெயரில் அமைந்த சத்திரங்கள்

30

பாயி சாகேப்களின் பெயர்களிலேயே சத்திரங்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறாகப் பாயிசாகேப்களின் பெயர்களில் அமைந்த சத்திரங்கள் 13. சத்திர நிர்வாகம் பாயிசாகேப்களிடமே இருந்தது. இவற்றில் மிகப் பழமையானது எனக் கூறத்தக்கது முதலாம் துளஜாவின் மனைவி பெயரில் அமைந்த இராஜகுமாரபாயி சத்திரம் ஆகும். இதன் பின்னர்ப் பிரதாபசிங்கர் காலத்தில் 'சக்வாரம்பா சத்திரம் திருபுவனத்திலும், யமுனாம்பா சத்திரம் நீடாமங்கலத்திலும், திரௌபதாம்பா சத்திரம் மணல்மேற்குடியிலும். இரண்டாம் துளஜாவின் காலத்தில் இராஜகுமாரம்பா சத்திரம் மீனமேசலிலும், மோகனாம்பா சத்திரம் இராஜா மடத்திலும். இராசசாம்பா சத்திரம் தாராசுரத்திலும் உமாபாயி சத்திரம் மகாதேவபட்டணத்திலும் அமைக்கப்பட்டன. இரண்டாம் சரபோசியின் காலத்தில் முக்தாம்பாள்புரம் சத்திரம் ஒரத்தநாட்டில் கட்டப்பட்டது. அரசியர்களின் பெயர்களில் கட்டப்பட்ட சத்திரங்களிலேயே மிகப்பெரிய சத்திரமாகத் திகழ்வது முத்தாம்பாள் சத்திரமாகும். இச்சத்திரம் 1800இல் கட்டப்பட்டதாகும். சரபோசி மன்னரின் ஆசைநாயகியாகிய முத்தாம்பாள் இறக்கும் தறுவாயில் தன் பெயரால் ஓர் அன்ன சத்திரம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் பெயரால் முத்தாம்பாள் சத்திரம் நிறுவப்பட்டது. 31 கடைசி சிவாசியின் காலத்தில் சைதம்பா சத்திரம் சூரக்கோட்டையிலும், அகல்யாபாயி சத்திரம் மல்லியத்திலும், பஞ்சநத மோகனாம்பாள் சத்திரம் திருவையாற்றிலும் கட்டப்பட்டன. பள்ளியக்கிரகாரத்தில் இலட்சுமிராசபுரம் சத்திரமும் கட்டப்பட்டது. 32

முடிவுரை

இவ்வாறாகத் தஞ்சை மராத்திய அரசியர்களைப் பற்றிய குறிப்புக்கள் மோடி ஆவணங்களில் காணப்படுகின்றன. அரசியர்களின் பணிகள் குறிப்பிடத்தக்கவை. அரசர்களைப் போன்று அரசியர்களும் மராத்தியர் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளனர் என்பதை ஆவணச் சான்றுகள் மூலம் அறியமுடிகின்றன.

28 பா. சுப்பிரமணியன் (ப. ஆ). மு. கா. நூல். ப. 131.

29

30

209.

கே. எம். வேங்கடராமையா. மு. கா. நூல். ப. பா சுப்பிரமணியன் (ப. ஆ. மு. கா. நூல். ப. XXI. 31 கே எம். வேங்கடராமையா, மு.கா, நூல். ப. 181. 32. பா. சுப்பிரமணியன் (ப.ஆ), மு. கா. நூல். ப. கா .நூல். ப. XXII.

காகிதச்சுவடி ஆய்வுகள்

391