உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆ.வேலுசுவாமி சுதந்திரன்,

த.தனவதி தமிழ்ப்பல்கலைக்கழகம்

காஸ்யப சில்ப சாஸ்திரம்

சரசுவதி மகால் நூல் நிலையத்திலிருந்த சுவடியை ஆதாரமாகக் கொண்டு இந்நூல் சுப்பிரமணிய சாஸ்திரியாரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு எழுதப்பட்டதாகும். தொண்ணூற்று இரண்டு படலங்களைக் கொண்ட இந்நூலில் ஒன்று முதல். நாற்பத்தைந்து படலங்கள் முதலாவது பாகமாகவும், நாற்பத்தாறு முதல் தொண்ணூற்று இரண்டு படலங்கள் இரண்டாவது பாகமாகவும் இடம் பெறுகிறது

முதலாவது படலத்தில் உத்தம, மத்திம. அதம பூமி இலக்கணம் கூறப்படுகிறது ஒரு முழம் அகலம், ஒரு முழம் நீளம். ஒரு முழம் தாழத்திற்கு. மண்ணைத் தோண்டிக் குழி எடுக்க வேண்டும். பிறகு. சிறிது நேரம் கழித்து, வெளியே எடுத்த மண்ணைக் கொண்டு அக்குழியை நிரப்ப வேண்டும். குழி நிரம்பியும் மண் மீதி வந்தால், அப்பூமி உத்தமமான பூமியாகும். இப்பூமிப் பகுதியையே, வீடுகள். அரண்மனைகள். கோயில்கள் கட்டுவதற்குத் தேர்ந்தெடுப்பர். அவ்வாறு கட்டப்பட்ட கோயில்களே இன்று நில நடுக்கத்தையும். புயலின் வேகத்தையும் தாங்கி, இன்றும் சிறந்த நிலையில் காட்சி தருகிறது. தோண்டி எடுத்த மண். குழியைச் சமமாக மூடினால் அப்பூமி, மத்திமம் பிரிவைச் சாரும். இப்பூமியையும் தேர்ந்தெடுப்பதில் தவறில்லையென்று குறிப்பிடுகிறது. தோண்டி எடுத்த மண். குழியை நிரப்பாமல் இருந்தால் அப்பூமி அதமம் பிரிவைச்சாரும். இப்பூமியை எந்தக் காரியத்திற்கும் பயன்படுத்தக் கூடாது.

விவசாயம் செய்வதற்குரிய நிலத்தைத் தேர்ந்தெடுப்பதையும் இந்நூல் விவரிக்கிறது. விதைத்த நெல், மூன்று நாளில் முழைத்தால் அப்பூமி உத்தமம் பிரிவைச்சாரும். அந்நிலத்தையே விவசாயத்திற்கேற்ற நிலமாகக் கருத வேண்டும். நான்கு நாள் கழித்து முளைத்தால் அப்பகுதி மத்திமம் பிரிவைச் சாரும். ஐந்து நாள் கழித்து முளைத்தால் அப்பூமி அதமம் பிரிவைச் சாருமெனலாம்.

நாற்பத்தைந்தாவது படலத்தில் கோபுர இலக்கணம் விளக்கப்படுகிறது. துவார சோபை துவார சாலை. துவார பிரஸாதம். துவார கர்மியம், துவார கோபுரம் என ஐந்து விதமான கோபுரங்கள் விளக்கப்படுகின்றன. துவார சோபை என்பது, ஒன்று முதல் மூன்று நிலைகளைக் கொண்டதாகும். நான்கு நிலைகளைக் கொண்டது துவார சாலையாகும். ஐந்து நிலைகளைக் கொண்டது துவார பிரசாதமாகும். ஆறு நிலைகளைக் கொண்டது துவார கர்மியம் எனப்படும். ஏழு நிலைகளைக் கொண்டது துவார கோபுரமாகும். பல்லவர் காலக் கோயில்களில் மூன்று நிலைகளைக் கொண்ட, துவார சோபையைப் பார்க்கலாம். சோழர் காலத்தில் ஏழு நிலைக் கோபுரங்கள் தோன்றின.

392

காகிதச்சுவடி ஆய்வுகள்