உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர். விசய நகர நாயக்கர் காலங்களில் பதின் மூன்று நிலைகளைக் கொண்ட கோபுரங்கள் தோன்றின. ஆனால் அக்கோபுரங்கள் எந்தவிதப் பிரிவைச் சார்ந்ததென்பதை, இந்நூல் குறிப்பிடவில்லை. மேலும். இந்நூல். கோபுர அதிஷ்டானமானது. உபபீடத்தினுடனோ அல்லது உபபீடம் இல்லாமலோ இருக்கலாமென்று குறிப்பிடுகிறது. இன்றும் கோயில்களில் உப்பீடத்துடனும். உப்பீடம் இல்லாமலும் கோபுரங்களைப் பார்க்கலாம். பிற்காலத்துக் கோயில்களில். உபபீடத்துடன் கூடிய கோபுரங்கள் இடம் பெறுகின்றன. உப்பிடத்துடன் காட்சி தரும் கோபுரத்திற்குச் சிறந்த உதாரணமாக மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருவாரூர். சிதம்பரம். திருவண்ணாமலை. திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களின் வெளிக் கோபுரங்களைக் குறிப்பிடலாம்.

1

பல சிற்பங்களின் அளவு முறைகளையும். படிமக்கலைக் கூறுபாடுகளையும் இந்நூல் விவரிக்கிறது. பல கோயில்களில் இடம்பெறும் சிற்பங்கள். இந்நூல் குறிப்பிடும் அளவு முறைகளின் அடிப்படையில் தோன்றியதால், இன்றும் கலையழகு குன்றாது காட்சி தருகிறது. இந்நூல் குறிப்பிடும் பல இலக்கணங்கள் அக்காலக் கணித அறிவை வெளிப்படுத்துகிறது. சிறந்த உதாரணமாக. உத்தம நவதால இலக்கணம். மத்தியம் நவதால இலக்கணம். அதம நவதால இலக்கணம். அஷ்டதால இலக்கணம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

சோமாசுகந்த மூர்த்தியில் இடம்பெறும் சிவன் பார்வதி. கந்தன் உருவங்களின் அளவுகளையும் படிமக்கலைக் கூறுபாடுகளையும் இந்நூல் குறிப்பிடுகிறது. தேவியின் இரண்டு கைகளிலும் மலர்களோ அல்லது இடது கை கடக ஹஸ்தமாகவோ சிம்ம கர்ணமாகவோ அமைந்து வலது கை மலரையோ அல்லது மாம்பழத்தையோ பிடித்திருக்கலாமென்றோ குறிப்பிடுகிறது. கோயில்களில் குறிப்பிடும் பெரும்பாலான சோமாசுகந்தச் சிற்பங்கள். இந்நூல் குறிப்பிடும் சிற்ப இலக்கணத்தைத் தன்னகத்தே கொண்டு காட்சி தருகிறது. இருப்பினும் சில வேறுபாடுகளைச் சில சிற்பங்களில் பார்க்கலாம். திருப்புகலூர் அக்னீசுவரர் கோயிலில்

இடம்பெறும் சோமாசுகந்த மூர்த்தி செப்புத் திருமேனியில். தேஷவரர் கோயிலில்

பீடத்தின்

மீது ஊன்றிய நிலையில். நந்தியைப் பிடித்திருக்கிறது. நந்தி இடம் பெறவேண்டுமென்று இந்நூல் எங்கும் குறிப்பிடவில்லை. இப்புதுமைக்குக் காரணம். அக்கோயில் புராணச் செய்தியாகும். இராமபிரானுக்கு. சிவனை வழிபடுவதற்கு, நந்தி தடையாக இருந்ததால். பார்வதி நந்தியைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டாள். இப்புராணக் கருத்தே. இப்புதுமையான சிற்பத்திற்குக் காரணமாகும். இவ்விதி விலக்குகள் குறித்து இந்நூல் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை சந்திர சேகரமூர்த்தி. நிருத்தமூர்த்தி, ரிஷபவாகனமூர்த்தி போன்ற தெய்வ வடிவங்களின் இலக்கணங்களும் இந்நூலில் இடம் பெறுகிறது.

இந்நூலில் கூறப்படும் அளவு முறைகளைக் கையாண்டு தெய்வத் திருமேனிகளை உருவாக்கினால், சிற்பங்கள் கலையழகும். தெய்வீக வடிவமும். சக்தியும் பெறுமெனலாம். இந்நூல் குறிப்பிடும் அளவு முறைகள். எந்த நூற்றாண்டிற்கும் பொருந்துமெனலாம். தொண்ணூத்தொன்றாவது படலத்தில் பக்த இலக்கணம் குறிப்பிடப்படுகிறது. பக்தர்கள் விபூதி உத்திராட்ச மாலை அணிய வேண்டுமென்று இந்நூல் வலியுறுத்துகிறது. உத்திராட்ச மாலையணிதல். உடம்பிற்கு காகிதச்சுவடி ஆய்வுகள்

393