உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நல்லதென்று விஞ்ஞானிகள் குறிப்பிடுவதை இங்குச் சுட்டிக் காட்டுவது பொருத்தமுடையதாகும். எண்பத்தொன்பதாவது படலத்தில். பலவித

வர்ணங்களையும் உருவாக்கும் முறை விவரிக்கப்படுகிறது.

கொண்ட

இந்நூல்

பலவிதக் கருத்துக்களைத் தன்னகத்தே என்றென்றைக்கும் மனித சமுதாயம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகும். இந்நூலில் குறிப்பிடும் அளவு முறைகளையே பிற சிற்ப சாஸ்திர நூல்களும். ஆகமங்களும் குறிப்பிடுவது. இந்நூலுக்கு மற்றுமொரு பெருமை சேர்க்கிறது.

இந்நூலில் குறிப்பிடப்படும். கருத்துகளுக்கு முன்னோடியாக. தமிழ் இலக்கியங்கள் விளங்கின என்ற கருத்துமுண்டு. கட்டடங்கள் கட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கும். நல்ல பூமியின் இலக்கணத்தை நாலடியாரும் குறிக்கிறதென்ற கருத்துமுண்டு சங்க நூலான திருமுருகாற்றுப்படையில். ஆறுமுகங்களும். பன்னிருகைகளும் கொண்ட முருகப் பெருமானின் வடிவம் விளக்கப்படுகிறது. பன்னிரண்டு கைகளிலும் என்னென்ன ஆயுதங்கள் இடம் பெறுகிறதென்பதையும் இந்நூல் விவரிக்கிறது. இன்றும் பல கோயில்களில் இடம் பெறும் முருகப் பெருமான் சிற்பங்களில், இத்தகு ஆயுதங்கள் இடம் பெறுகின்றன. சிறந்த உதாரணங்களாகத் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில். தஞ்சைப் பெரிய கோயில் திருச்சுற்றில் இடம் பெறும் முருகன் கோயில் சிற்பங்களைக் குறிப்பிடலாம். சிலப்பதிகாரத்தில் கொற்றவையின் வடிவம் விவரிக்கப்படுகிறது. துர்க்கையின் ஊர்தியாக மான் விளக்கப்படுகிறது. சென்னைப் பல்கலைக்கழகத் தொல் பொருள் துறையில் மானை ஊர்தியாகக் கொண்ட தூர்க்கையின் சிற்பம் (கல்) இடம் பெறுகிறது.

!

இந்நூல் தோன்றுவதற்குத் தமிழ்ப் பக்தி இயக்கம் ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும் ஏனெனில் தேவார பக்தி இலக்கியங்களில் குறிப்பிடப்படும் தெய்வ வடிவங்களே இந்நூலில் அதிகமாக இடம் பெறுகின்றன. கால சம்ஹார மூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி. சந்திர சேகர மூர்த்தி போன்ற வடிவங்களை உதாரணமாகக் கூறலாம்

தமிழ் இலக்கியக் கருத்துக்கள் இடம் பெற்றபோதிலும். இந்நூல் வடமொழியில் எழுதப்பட்டதற்கான காரணம். அந்தக் கால கட்டத்தில் வடமொழிக்கு. மன்னர்களின் ஆதரவு இருந்தமையேயாகும். மேலும் வடமொழிப் புராணங்களில் குறிக்கப்படும் அதிகமான கதைகளையொட்டிப் படிமக்கலைக் கூறுபாடுகள் எழுதப்பட்டிருக்கின்றன. சாதிகளுக்கேற்ப நிலங்களைப் பிரித்துக் காட்டுமொன்றே. இந்நூலின் குறையாகக் கருதலாமே தவிர வேறொரு குறைபாடும் இந்நூலில் இல்லையென்றே கருதலாம்.

394

காகிதச்சுவடி ஆய்வுகள்