உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ப. பெருமாள்

கன்சர் வேட்டர்

சரசுவதி மகால் நூலகம் தஞ்சாவூர்

சுவடிப் பாதுகாப்பில் வளர்ந்து வரும் தொழில் நுட்ப முறைகள்

நம் முன்னோர்கள் தங்களது கருத்துக்களையும் அனுபவத்தினையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் சித்திரங்களாகவும், எழுத்துக்களாகவும் எழுதி வைத்தார்கள். பின்னர் நாகரிக வளர்ச்சியினால் எளிதாகக் கையாளக் கூடிய எழுது பொருட்களான செங்கல். ஓட்டுச் சில். உலோகத் தகடுகள், தாவரப் பொருட்கள். மரப் பலகை, மரப் பட்டை, பனை ஒலை பேப்பைரஸ் என்ற கோரைப் புல், மூங்கில் தப்பைகள், துணிகள் மற்றும் மிருகங்களின் தோலினாலான பொருட்கள். சங்கு, சிப்பிகள் எலும்பு. தந்தம் போன்றவற்றைப் பயன்படுத்தினார்கள். இப்பொருட்கள் எப்பகுதியில் அதிகமாகக் கிடைத்தனவோ அப்பகுதியில் பயன்படுத்தப்பட்டன. காகிதம் கண்டுபிடித்த பின். அதில் எழுதுவதும். கையாளுவதும் எளிதாக இருப்பதால் காகிதத்தின் பயன்பாடு அதிகமாயிற்று. இதனால் மற்ற பொருட்களில் எழுதும் வழக்கம் மறையத் தொடங்கியது. காகிதத்தைப் பயன்படுத்திச் சுவடிகள், ஆவணங்கள். புத்தகங்கள் வெளிவரத் தொடங்கின.

கி. பி. 325இல் இந்தியாவிற்கு அலெக்ஸாண்டர் படையெடுத்து வந்த பொழுது அவருடன் வந்த கிரேக்க எழுத்தாளர் ஹிகர்டஸ். அவருடைய படைப்புகளில் இந்தியாவில் காகிதத்தின் பயன்பாடு இருந்ததாகவும். அது பருத்தியை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். இது சீனக் காகிதத் தயாரிப்பு முறையிலிருந்து மாறுபட்டது. ஆனால் தொடர்ந்து காகிதம் பயன்படுத்தாததாலும், இந்தியாவின் தட்பவெப்ப நிலையின் காரணத்தாலும் எழுதப்பட்ட காகிதங்கள் காணக் கிடைக்கவில்லை. ஆகையால் முதன் முதலில் கி.பி. 105இல் காகிதம் தயாரித்த பெருமை சீனாவை அடைந்தது. சீனர்கள் காகிதம் தயாரிக்கும் முறையை மற்றவர்களுக்குத் தெரியாமல் பாதுகாப்பாக வைத்திருந்தனர். காகிதம் தயாரிக்கும் முறை சீனப் பண்பாட்டுடன் கி. பி. 345இல் கொரியாவுக்கும், கி. பி. 610இல் ஜப்பானுக்கும் பரவிற்று. கி. பி. 8ஆம் நூற்றாண்டிற்குப் பின் காகிதம் தயாரிக்கும் முறை மற்ற மேலை நாடுகளுக்கும். கி. பி. 12ஆம் நூற்றாண்டிற்குப் பின் முகமதிய மன்னர்களால் இந்தியாவிலும் பரவியது. உலகின் பல நாடுகளிலும் காகிதம் தயாரிக்கும் முறை பரவினாலும் இடத்திற்கு ஏற்றவாறு மூலப் பொருட்களும், செய்யும் முறையும் மாறுபட்டன. அறிவியல் வளர்ச்சியினால் தேவைக்குத்தக்க இயந்திரக் காகிதங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

காகிதச்சுவடி ஆய்வுகள்

395