உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொதுவாகக் காகிதங்களை. அதன் மூலப் பொருட்களை அடிப்படையாகக்

கொண்டு நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

1.

2.

பருத்தி வகைக் காகிதம்

தாவரப்பட்டையில் உள்ள நார்ப் பொருள் வகைக் காகிதம்

3. புல். மூங்கில் வகைக் காகிதம்

चं

மரக்கூழ் வகைக் காகிதம்

ஆகும்.

தொடக்க காலங்களில் காகிதங்கள் கையால் செய்யப்பட்டன ஆனால் அறிவியல் வளர்ச்சியின் பயனாகக் கி பி. 1795இல் நிக்கோலாய் லூயிராபர் என்பவர் காகிதம் தயாரிக்கும் எந்திரத்தைக் கண்டுபிடித்தார் அதனால் காகிதத்தின் தேவை அதிகமாயிற்று. காகிதத்தின் தேவைக்காக வெவ்வேறு மூலப் பொருட்களும், அதிக வேதிமப் பொருட்களும் பயன்படுத்தப்பட்டன ஆகையால் இயந்திரக் காகிதங்கள் விரைவில் அழிவதற்குக் காரணமாயின

காகிதத்தில் எழுதுவதற்குத் தொடக்க காலங்களில் மூங்கில், நாணல்களில் செய்யப்பட்ட பேனா அல்லது பறவைகளின் இறகுகள் பயன்படுத்தப்பட்டன முக்கியமாகக் கழுகு மற்றும் வாத்தின் இறகுகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. ஏனெனில் அவற்றின் நுனி மிகவும் கடினமாகவும், கூர்மையாகவும் உள்ளது. காகிதத்தில் எழுதுவதற்குப் பல நிற மைகள் (மசிகள்) பயன்படுத்தப்பட்டன. மை தயாரிக்கக் கடுக்காய், மருதோன்றி இலை. அவுரி இலை போன்றவை பயன்படுத்தப் பட்டன இந்தியாவில் உள்ள காகிதச் சுவடிகள் அதிகமாகக் கருப்பு மைகளில் எழுதப்பட்டன முதன் முதலில் இந்தியாவில் கருப்பு மை தயாரித்ததால் அதற்கு இந்தியன் மை எனப் பெயர் பெற்றது. இந்தியன் மையானது இலுப்பை எண்ணெய் அல்லது விளக்கு எண்ணெய் உபயோகப்படுத்தப்பட்ட விளக்கிலிருந்து கரி தயார் செய்து அவற்றில் தேவையான அளவு வேலாம்பிசின் மற்றும் மழை நீர் சேர்த்து எழுதப் பயன்படுத்தப்பட்டன சில வகை ஆவணங்களில் தண்ணீர் பட்டாலும் கரையக் கூடாது என்பதற்காக ஆவணங்களும் சுவடிகளும் கடுக்காய் மையினால் எழுதப்பட்டன இவ்வகை மை தயாரிக்கக் கடுக்காய்ச் சாற்றுடன் பேதி உப்பு. வேலாம் பிசின், மழை நீர் சேர்த்துத் தயாரிக்கப்பட்டது.

இவ்வாறு எழுதப்பட்ட சுவடிகள், நூல்கள் ஒருவர் கருத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க உதவும் கருவிகளாகும் அதைத் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப் பட வேண்டும் புத்தகப் பாதுகாப்பு என்பது மனிதன் நாகரிகம் அடைந்த காலம் முதல் செய்யப்படும் செயலாகும். பாதுகாக்கும் முறை இடத்திற்கு இடம் எழுதப்பட்ட பொருள்களுக்கேற்ப மாறுபட்டன. ஆகையால் சுவடிகளைப் பாதுகாக்கச் சுவடிகளின் தன்மை. எழுதப்பட்டமுறை. பாதிக்கும் காரணிகள். கட்டுப்படுத்தும் முறை மற்றும் செப்பனிடும் முறைகளைப் பற்றி அறிந்து கொள்வது மிக அவசியமாகும் சுவடிகளைப் பாதுகாக்கத் தொடக்க காலம் முதல் பல்வேறு முறைகளையும். அறிவியல் வளர்ச்சியினால் பல்வேறு புதிய கருவிகள் மற்றும் முறைகளைக் கொண்டு சுவடிகள் பாதுகாப்பு முறை செய்யப்படுகிறது.

396

காகிதச்சுவடி ஆய்வுகள்