உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுவடிகளைப் பாதிக்கும் காரணிகள்

சுவடிகளைப் பாதுகாக்க வேண்டுமெனில் அதன் அழிவுக்கான காரணிகளைப் பற்றி அறிந்து கொள்வது மிக அவசியம். சுவடிகள் அழிவதற்குச் சுவடிகள் தயாரிக்கப் பயன்படுத்தும் தரமில்லாத மூலப் பொருட்கள். தயாரிக்கும் முறை, தயாரிக்கும் பொழுது சேர்க்கப்படும் சேர்ப்புப் பொருட்கள் மற்றும் தரமற்ற மைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படுகின்றன. மற்றும் காற்றிலுள்ள தூசு, வெப்பம். ஒளி. காற்றிலுள்ள நீர், காற்றிலுள்ள வேதிமப் பொருட்கள், பூஞ்சைக் காளான்கள், பூச்சிகள் போன்ற காரணிகளால் சேத மடைகின்றன. பாதுகாப்பு என்பது இருவகைப்படும். ஒன்று சுவடிகள் சேதமுறா வண்ணம் எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றொன்று பாதிப்பிற்குள்ளான சுவடிகளைச் செப்பனிடுதல் ஆகும்.

சுவடிப் பாதுகாப்பு

சுவடிகளைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க முதன் முதலில் சீடர்மர எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. அதன் பின் சுவடிகள் தூசு. வெப்பம். ஒளி. காற்றிலுள்ள நீர் போன்றவற்றின் பாதிப்பைத் தடுக்கப் பட்டுத் துணிகள் அல்லது சிவப்பு நிறத் துணிகளில் கட்டி மர அலமாரியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டன. பூச்சிகளின் பாதிப்பைத் தடுக்க வசம்பு. மஞ்சள், வேப்ப இலை, சூடம் போன்ற அன்றாட நடைமுறையில் உள்ள பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. பொதுவாகச் சுவடி வைத்த அறைகளில் தூசி வரமாலும். 24°C வெப்பமும். 50 - 55% RH ஈரப் பதமும் இருக்குமாறு அமைத்தால் சுவடிகளைப் பூஞ்சைக் காளான்கள் மற்றும் பூச்சிகளின் தாக்குதலிலிருந்து தவிர்க்கலாம். ஆகையால் மேலை நாடுகளில் சுவடி மற்றும் நூல்களைப் பாதுகாக்கப் பல்வேறு அறிவியல் முறைகளும். பாதுகாப்புக் கருவிகளும் பயன் படுத்தப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றிய கருத்துக்கள் இங்குக் குறிப்பிடப் படுகின்றன.

தட்பவெப்ப நிலையைச் சமப்படுத்தல்

சுவடிகள் தேவைக்கு அதிகமான வெப்பம். குறைந்த அல்லது அதிகமான ஈரப் பதத்தினால் காகிதத்தின் உறுதித் தன்மை, பூஞ்சைக் காளான் மற்றும் பூச்சிகளினால் பாதிப்பு ஏற்படுகின்றன. பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளில் தூசு. வெப்பம் காற்றில் உள்ள ஈரப் பதங்களைக் கட்டுப்படுத்தச் சுவடிகளை வைத்திருக்கும் அறைகளில் சம தட்பவெப்பநிலை (Air conditioner) உருவாகும் கருவிகள் பொருத்தப்படுகின்றன பொதுவாகச் சுவடிகள் வைத்திருக்கும் அறையில் 50° RH ஈரப் பதம் 24°C வெப்பமும் தொடர்ந்து வருடத்தின் 24 மணி நேரமும் இருக்குமாறு அமைக்கப்படுகிறது. சம தட்பவெப்ப நிலை அறையில் உள்ள சுவடிகள். அச்சூழ்நிலையிலிருந்து மாறும் பொழுது மிகவும் சேதமடைகிறது. ஆகையால் வெப்பம் ஈரப் பதத்தினைச் சரியான அளவில் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

சம தட்பவெப்ப நிலையைப் பராமரிக்க இயலாத நிறுவனங்கள். சுவடிகள் வைத்திருக்கும் அறையைத் தெர்மோ ஹைகுரோகிராப் என்னும் கருவியைப் பயன்படுத்தித் தட்ப வெப்ப நிலை மாறுபாட்டை அறிந்து அதை நிவர்த்திக்கும் செயல்களைச் செய்கின்றன. தெர்மோ ஹைகுரோகிராப் கருவியானது ஓர் அறையில்

காகிதச்சுவடி ஆய்வுகள்

397