உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உள்ள வெப்பம் மற்றும் ஈரப் பதத்தினை அறிவிக்க அக்கருவியில் பொருத்தப்பட்டுள்ள வரை தாளில் வாராந்திர அல்லது மாதாந்திர அளவில் கோடுகள் வரைந்து பதிவு செய்யும். இக்கோடுகளைக் கொண்டு தட்ப வெப்ப நிலையின் மாறுதல்களைச் சரி செய்யலாம். ஓர் அறையில் வெப்பம் அதிகமாக இருத்தால் அந்த அறையில் ஹுமிடிபயர் (Humidifier) என்ற கருவியைப் பொருத்துவதன் மூலம் அவ்வறையின் வெப்பத்தைக் குறைக்க முடியும். இக்கருவியானது அறையின் காற்றை உறிஞ்சி ஈரப்பதம் அதிகமாக உள்ள காற்றை வெளியிடுகிறது. அதனால் ஈரப்பதம் சமப்படுத்தப்படுகிறது. அதுபோல் மழைக் காலங்களில் அறையில் உள்ள அதிக ஈரமான காற்றை உறிஞ்சி ஈரப்பதத்தைக் குறைக்க டி ஹுமிடிபயர் (De Humidifier) என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.

பூச்சிகள் பூஞ்சைக் காளான்களைக் கட்டுப்படுத்தும் முறை

ஓர் அறையில் ஏற்படும் தட்ப வெப்ப நிலை மாறுபாட்டால் காற்றில் உள்ள நுண்ணுயிர்களால் சுவடிகளில் பூஞ்சைக் காளான் வளர்கிறது. இது சுவடிகளின் மீது வளர்வதால் நிற மாற்றம் மற்றும் தாள்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். பூஞ்சைக் காளான் பாதிப்பைத் தொடர்ந்து பூச்சிகள் சுவடிகளைப் பாதிக்கும். பூச்சிகள் (சிறு பூச்சிகள். பெரிய பூச்சிகள்) சுவடிகளைப் பாதிக்கும் பூச்சிகள் பெரிய அளவில் இருந்தால் அவற்றைச் சில வேதிமப் பொருட்களைத் தூவித் தடுக்க முடியும். ஆனால் புத்தகங்களைப் பாதிக்கும் சிறு பூச்சிகளையும். பூஞ்சைக் காளான்களையும் வேதிமப் புகையூட்டல் முறையில் கட்டுப்படுத்த வேண்டும். 'தைமால்' என்ற வேதிமப் பொருளைப் பூஞ்சைக் காளான்களைக் கட்டுப்படுத்தவும். பாராடை -குளோரோ - பென்சின் என்ற பொருளைப் பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகின்றன. அறிவியல் வளர்ச்சியால் ஆவணக் காப்பகங்களில் காற்று நீக்கி. புகையூட்டல முறை மூலம் பூச்சிகள். மற்றும் பூஞ்சைக் காளான்கள் கட்டுப்படுத்தப் படுகின்றன. அண்மைக் காலங்களில் மேலை நாடுகளில் வேதிமப் பொருட்கள் அதிகமாகப் பயன்படுத்துவது தவிர்க்கப் படுகிறது ஆகையால் -10° C குளிர்பதன அறைகளில் 24 மணி நேரமும் வைத்துப் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

அமில நீக்கு முறை

சுவடிகள் அமிலத் தன்மையால் பாதிக்கப்படுகின்றன. சுவடிகளில் அமிலத் தன்மையானது. காகிதம் தயாரிக்கப் பயன்படுத்தும் வேதிமப் பொருட்களின் எச்சத்தாலும், காற்றில் உள்ள வேதிமப் பொருட்களின் மாறுபாட்டுத் தன்மையாலும் சுவடிகளின் மீது அமிலத் தன்மை ஏற்படுகிறது. இந்த அமிலத் தன்மை காகிதத்தின் நார்ப் பொருட்களைப் பாதித்துச் சிதிலமடையச் செய்கிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட சுவடிகளையும் நூல்களையும் நீர்த்த அமோனியா திரவத்தின் ஆவி படியச் செய்வதாலும், Di Ethylzinc என்ற வேதிமப் பொருள் கொண்டு அதிக அளவிலான சுவடிகளை அமில நீக்க முறையில் மேலை நாடுகளில் சுவடிகளிலுள்ள அமிலத்தன்மை நீக்கப்படுகின்றது,

லேமினேசன்

398

சிதிலமடைந்த சுவடிகளைச் செப்பனிடப் பல முறைகள் பயன்படுத்தப் காகிதச்சுவடி ஆய்வுகள்