உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




படுகின்றன. அவற்றுள் லேமினேசன் என்ற முறையும் ஒன்று. மிகச் சிதிலமான காகிதச் சுவடிகளை. ஜப்பான் டிசியு பேப்பர் மற்றும் செல்லுலோஸ் அசிடேட் தாள்களைச் செப்பனிடும் சுவடியின் அளவை விடச் சிறிது. பெரிதாக எடுத்து இரு புறமும் செல்லுலோஸ் தாள்களைச் சுவடியின் மீது படுமாறு அமைத்து 70°C முதல் 100°C வரை வெப்பப்படுத்தினாலோ அல்லது அசிட்டோன் என்ற வேதிமக் கரைசலைப் பஞ்சினால் தேய்க்கும் பொழுது செல்லுலோஸ் தாள் கரைந்து ஜப்பான் டிசியு பேப்பர் இரு புறமும் ஒட்டிக் கொள்ளும். இதனால் சிதிலமடைந்த சுவடிகள் உறுதியடைகின்றன. இந்த முறையில் செய்யப்படும் சுவடிகளைத் தேவை ஏற்படின் பிரித்து எடுத்துக் கொள்ளலாம். இம்முறை கையாலும், சில நிறுவனங்களில் இயந்திரங்களின் மூலமாகவும் செய்யப்படுகிறது.

சுற்ற மைத்தல் (Encaptulation)

சுவடிகள் மற்றும் சிதிலமடைந்த ஆவணங்களைப் பாதுகாக்க மேலை நாடுகளில் லேமினேசன் செய்வதற்குப் பதில் என்கேப்சுலேசன் என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் ஆவணங்களின் அளவை விடப் பெரிய அளவில் பாவியஸ்டர் தாள்களை வெட்டி மேலும் கீழும் வைத்து இரு பக்கம் ஒட்டும் நாடா அல்லது வெப்பம் அல்லது மிக வேகமான அழுத்தத்தினால் ஒரங்கள் ஒட்டப்படுகின்றன. இம்முறையில் பாலியஸ்டர் தாள்கள் சிதிலமான சுவடிகளை வெளிப்புக் காரணிகளிலிருந்து பாதுகாக்கிறது.

காகிதக் கூழ் முறை செப்பனிடுதல் (Leaf Casting)

சேதமடைந்த. பூச்சிகள் மற்றும் அமிலத் தன்மையால் சிதிலமடைந்த காகிதச் சுவடிகள். ஆவணங்கள் போன்றவற்றைச் சாதாரணமாக டிசியு தாள்கள் கொண்டு செப்பனிடப்படுகின்றன. மேலை நாடுகளில் சேதமடைந்த இடங்களைச் செப்பனிடச் சுவடியின் தன்மை கொண்ட காகிதக் கூழைத் தயாரித்து அவற்றைக் கொண்டு செப்பனிடப்படுகிறது. மேலை நாடுகளில் லீப் காஸ்டிங் கருவி தயாரித்து கலையாத மை கொண்டு எழுதப்பட்ட சுவடிகள் மற்றும் ஆவணங்கள் இம்முறையில் பாதுகாக்கப் படுகின்றன. இம்முறையில் சிதிலமடைந்த காகிதத்திற்குப் புதுக் காகிதக் கூழ் கொண்டு செப்பனிடுவதால் சுவடிகள் அதிக நாட்களுக்குச் சேதமுறா வண்ணம் இருக்கும்.

நுண்படப் பாதுகாப்பு

சுவடிப் பாதுகாப்பிற்குச் சுவடிகளின் புறப் பொருட்களைப் பாதுகாப்பது மட்டுமன்றி அதன் அகப்பொருட்களான சுவடியில் உள்ள தகவலைப் பாதுகாக்க அறிவியல் வளர்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட நுண்படங்களின் மூலம் பதிவு செய்யப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. பல சுவடி நூலகங்கள் மற்றும் ஆவணக் காப்பகங்களில் உள்ள சுவடிகள், ஆவணங்களை நுண்படச் சுருள்களில் பாதுகாக்காகவும், ஆய்வாளர்கள் படிப்பதற்காகவும். மற்றும் தேவையான பிரதிகளைத் தயாரிக்கவும் பயன்படுகிறது.

காகிதச்சுவடி ஆய்வுகள்

399