உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மின்னணுவியல் பாதுகாப்பு

அறிவியல் வளர்ச்சியின் மூலம் ஏற்பட்ட கணிப்பொறி உலகின் ஒவ்வொரு துறையிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. அதற்குச் சுவடிகள். ஆவணங்கள் பாதுகாப்பு ஒரு விதி விலக்கல்ல. மேலை நாடுகளில் சுவடிகள். ஆவணங்கள், அரிய நூல்கள். புகைப்படங்கள், ஒவியங்கள் போன்ற அனைத்து அரிய பொருட்களையும் கணிப்பொறி மூலம் மின்னணுவியல் பதிவு செய்யப்பட்டு மென் தட்டுகளாகப் பாதுகாக்கப்படுகிறது. இவ்வகையில் பாதுகாக்கப்படுவதால் ஒரு நிறுவனத்தின் சுவடிகளில் உள்ள தகவலை மற்ற நிறுவனங்கள் பார்க்கவும், ஆய்வு செய்யவும் வசதி ஏற்படுகிறது.

இது போல் நம் முன்னோர்களின் பட்டறிவைப் பாதுகாக்கும் செயல்களும், கருவிகளும், அறிவியல் வளர்ச்சியினால் வளர்ச்சியடைகின்றன. அவற்றை அறிந்து நம் நாட்டு அறிவுப் பெட்டகங்களைப் பாதுகாப்பது நம் கடமையாகும்.

400

காகிதச்சுவடி ஆய்வுகள்