உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மு. ரெ. கலைச்செல்வி ஆய்வாளர்

அரிய கையெழுத்துச் சுவடித்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

மோடி ஆவணங்கள் சுட்டும் மராத்திய மன்னர்களின் சமயப் பணிகள்

கி.பி.

தஞ்சையைக் கி. பி. 1676ஆம் ஆண்டு முதல் கி. பி. 1855 வரை 180 ஆண்டுகள் 13 மராத்திய அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் ஆட்சிக் காலத்தில் இந்து, கிறித்துவ. இசுலாமிய மக்கள் ஒன்றாக வாழும் நல்லிணக்க இடமாகத் தஞ்சாவூர் திகழ்ந்தது. இம்மன்னர்கள் எவ்வித வேறுபாடுமின்றி எல்லாச் சமயத்தினரையும் ஆதரித்ததோடு மட்டுமின்றிச் சமய முன்னேற்றத்திற்காக அவர்கள் மேலும் பல கோயில்களுக்குப் பல்வேறு பணிகளைச் செய்துள்ளனர். அறக்கொடைகளையும் அளித்துள்ளனர். இவற்றை மோடி ஆவணங்களின் துணைகொண்டு இக்கட்டுரை ஆராய்கிறது.

தஞ்சை மராத்திய மன்னர்கள் அனைவரும் சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்த போதிலும் வைணவ சமயத்தைப் போற்றி வைணவக் கோயில்களை எடுப்பித்துக் கொடைகளை நல்கியுள்ளனர் வெளிநாட்டவர்கள் வருகையினால் கிறித்தவ சமயம் தஞ்சைப் பகுதியில் பரவத் தொடங்கியது. மன்னர்கள் சமயப் பொறையுடன் கிறித்தவத் துறவிகளுக்குத் தேவாலயம் கட்டுவதற்கு நிலம். பொருட்களைக் கொடையாக அளித்துக் கிறித்தவ சமயம் வளர ஆதரவளித்தனர். மேலும் இம்மன்னர்களால் தஞ்சையில் பல இசுலாமியர்கள் காவல், வணிகம், யுனானி, மருத்துவம் முதலான காரணங்களால் குடியேறினர். இசுலாமியர்களில் பலர் உயர் அதிகாரிகளாகவும் தஞ்சையில் இருந்தனர். அரண்மனை ஆவணங்களில் இசுலாமிய ஆண்டு முறை பின்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் பள்ளிவாசல், தர்காக்கள் போன்றவற்றைக் கட்டுவதற்கு நிலம் கொடையாக அளித்துள்ளனர். மோடி ஆவணங்களில் தஞ்சை மராத்திய மன்னர்களின் சமயப் பணிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றுள் ஓரிரு ஆவணக் குறிப்புகள் மட்டும் இவண் சுட்டப்பெறுகின்றன.

தஞ்சையிலுள்ள பிரசன்ன வெங்கடேசர் கோயில் கோபுரங்கள் பழுதடைந்து விட்டதால் அதனைக் கடைசி சிவாஜி மன்னர் காலத்தில் செப்பனிட்டுப் பழுது பார்க்கப் பட்டதை

"பிரசன்ன வெங்கடேசர் கோபுரங்கள் கி. பி. 1849இல் பழுது

பார்க்கப் பட்டன

காகிதச்சுவடி ஆய்வுகள்

401