உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மா. வேதநாதன் ஆய்வாளர்

தத்துவ மையம் தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்

ஈழத்துச் சிவயோக சுவாமிகளின் திருமுகங்கள்

அறிமுகம்

ஈழத்துச் சிவயோக சுவாமிகள் (1872 - 1964) இருபதாம் நூற்றாண்டின் சிறந்த ஞானியாக மதிக்கப்பெற்றவர். ஈழத்துச் சித்தர்களுள் தனிப்பெருஞ் சிறப்புக்குரியவர். 'ஒரு பொல்லாப்புமில்லை'. 'எப்பவோ முடிந்த காரியம்'. 'நாமறியோம்'. 'முழுதும் உண்மை' என்ற மகாவாக்கியங்களை அருளிய இவர், ஈழத்தின் வடபகுதியாகிய யாழ்ப்பாணத்திலுள்ள மாவிட்டபுரம் என்னுமிடத்தில் சைவ வேளாளர் மரபில் அம்பலவாணர் என்பவருக்கும். சின்னாச்சியம்மையாருக்கும் அருந்தவப்புதல்வராக அவதரித்தார். சதாசிவம் என்ற இயற்பெயர் கொண்ட இச் செந்தமிழ் ஞானியை. 'யோகர்', 'யோகநாதன்'. 'யோகசுவாமிகள்' என்ற பெயர்களால் மக்கள் அழைப்பர். இவரை நேரில் கண்டு தரிசித்த பேராசிரியர் தெ. பொ மீனாட்சிசுந்தரனார்.இவர் ஒரு பெரிய மகாஞானி' எனவும். ஞானத்தை அன்புடன் குழைத்துத் தனக்கு ஊட்டியதாகவும் குறிப்பிடுவர். சிவயோகசுவாமிகளது திருப்பாடல்கள், உரைநடைப் படைப்புகள், திருமுகங்கள் (கடிதங்கள்) என்பன தொகுக்கப்பட்டு 'நற்சிந்தனை' என்ற நூல் வடிவில் தமிழில் வெளிவந்துள்ளன. இதற்கு ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பும் உண்டு. இவர்தம் அன்பர்களுக்கு எழுதிய திருமுகங்கள் பலவாகும். அவற்றுள் சிலவே 'நற்சிந்தனை' என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 'நற்சிந்தனை'யில் பதிவு செய்யப்பட்டுள்ள திருமுகங்கள் வாயிலாக அறிந்து கொள்ளப்படும் ஈழத்துச் சிவயோக சுவாமிகளின் சமயத் தத்துவக் கோட்பாடுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

இறைக் கோட்பாடு

சிவயோக சுவாமிகள் சிவபெருமான், முருகன் மற்றும் ஒளிக்கடவுள் ஆகிய கடவுளர்மீது பல பாடல்களைப் பாடியுள்ளபோதும், இவர் 'ஓரிறைக் கோட்பாடுடையவ'ராக விளங்கினார். இதனை அவரது 'ஒன்றுதான் கடவுள்'.! 'ஒன்றுக்கு மஞ்சேல் ஒருவனே தெய்வம்'2 என்ற திருமுகவரிகள் நன்கு புலப்படுத்துகின்றன. எங்கும். எதிலும் ஓர் இறைவனே உறைந்து நிற்கின்றார் என்ற ஓரிறைக் கோட்பாட்டை இவரின் திருமுகம்.

-

காகிதச்சுவடி ஆய்வுகள்

409