உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




'நான்.நீ.ஐயா “நான். நீ. ஐயா

அப்பாச்சி.. அண்ணர், அக்காமார்,அத்தை,

அப்பாச்சி. பெரியையா, சீனியையா, சின்னையா. கந்தசாமி. கணபதி, வைரவர். வீரபத்திரர். காளி, கூனி, கிருஷ்ணன், கிறிஸ்து. புத்தன் முகம்மது. இராசரத்தினமாமா. சோமா மாமா. செல்லத்துரை மாமா கன்று. பசு.ஆடு. குதிரை, சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள் மேடம், இடபம். மிதுனம், கர்க்கடகம், சிங்கம். கன்னி. துலாம். விருச்சிகம். தனு. மகரம், கும்பம், மீனம். ஊர்வன, பறப்பன, கிடப்பன, நடப்பன. மலை, கடல், வாவி, குளம், கொடி, செடி என்று அளவிடக் கூடாமல் விரிந்து நிற்கிற ஒன்றுதான் கடவுள்3

எனக குறிப்பிடுவதாலறியலாம் இத் திருமுகச் செய்திகள் சிவயோக சுவாமிகள் ஓர் இறைக் கோட்பாட்டாளர் என்பதை மட்டுமல்லாது. சமய நல்லிணக்கத்தினை மதித்த ஞானி என்பதையும் புலப்படுத்துகின்றன எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் சிவயோக சுவாமிகள் விலங்குகள், பறப்பன, ஊர்வன என்பவற்றில் மட்டுமல்லாது விண்ணிலும், உறவுமுறைகளிலும் இறைவன் இருப்பதைக் குறிப்பிடுவது இவரின் தனித்துவ இறைக்கோட்பாடாகும் இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில் 14-11-33இல் அவர் எழுதிய திருமுகததில்

'அகர வுயிர்போ லறிவாகி யெங்கும் நிகரிலிறை நிறகும் நிறைந்து"

என்ற திருவருட்பயன் முதற்பாடலைக் குறிப்பிடுகின்றார்.4

உடம்புக்குள் இறைவன்

இறை ஞானிகள் இறைவனைத் தம் உடம்புக்குள் கண்டின்புறுவர். சிவயோகசுவாமிகளுக்கு இந்த இறையனுபவம் 1940ஆம் ஆண்டு காசியில் ஏற்பட்டது. இதனை அவர் 30-11-1940இல் எழுதிய திருமுகத்தில்

'தேடித் திரிந்து காசிக்கு வந்து கண்டேன் விசுவ்நாதனை என்னுள் வாடித் திரிந்து வருந்த வேண்டாம். தேடிய பூடு காலுக்குள்ளே என்ற தெவிட்டா வாசகமொன்றுண்டு 5

என்று குறிப்பிடுவதாலறியலாம்.

றைவன் ஒன்றாய் வேறாய் உடனாய் உள்ளவர்

இறைவன் உலகுயிர்களுடன் ஒன்றாகவும் வேறாகவும், உடனாகவும் நிற்பர் என்ற சைவ சித்தாந்த இறைக்கோட்பாட்டினைப் பிரதிபலிப்பது போன்று இவரின் திருமுகவரி 'கடவுள் உள்ளும் புறம்பும் உள்ளவர்"" என்று காணப்படுகின்றது.

சிவநெறிக் கொள்கை

சிவயோக சுவாமிகள் சிவநெறிக் கொள்கையை வளர்த்தெடுப்பதில் முனைப்புடன் செயற்பட்டவர். அவர் தான் வாழ்ந்த காலத்தில் வண்ணார்

பண்ணையில் 'சிவதொண்டன்' என்ற நிலையத்தை அன்பர்கள் மூலம் ஸ்தாபித்துச்

'சிவதொண்டன்' என்னும் மாத இதழையும் தொடக்கி வைத்துச் சிவத்தொண்டு.

410

காகிதச்சுவடி ஆய்வுகள்