உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிவத்தியானம். திருமுறை ஓதல். சைவ உணவு உண்ணல் ஆகிய சைவப் பண்பாட்டை மேற்கொண்டு வாழும் சைவத்தை வாழ்ந்து காட்டினார். இவரது உருவமே சிவவேடம் போன்றது இவரை நேரில் கண்டு வணங்கிய பேராசிரியர் தெ பொ. மீனாட்சிசுந்தரனார் இவரின் திருத்தோற்றத்தை.

"முகத்தில் குழைந்த புன்சிரிப்பு, நெற்றியில் திருநீற்று வெண்மை. இடுப்பில் சுற்றுக்கட்டாகக் கட்டிய வெள்ளை வேட்டி, மார்பு வரை வந்து புரளும் நரைத்த தாடி, தலையெல்லாம் நரைத்து வெளுத்த முடி. முழுவதுமாகிய பேரின்பக் களிப்பு'

என்று குறிப்பிடுவது நோக்கற்பாலதாகும் இத்தகைய சிவநெறிச் சீலராக விளங்கிய சிவயோக சுவாமிகள் 'எல்லாம் சிவன் செயல்8. "எல்லாம் சிவமாய் இருக்கின்றன அப்போது நீ யார்? நான் யார்? ஐயா யார்? மற்றும் எல்லாம் என்ன சிவமல்லவா இன்னும் சந்தேகமா?9 என்றும் தமது திருமுகங்களில் குறிப்பிடுவது அவரது சிவநெறிக் கொள்கையினை விளக்கி நிற்கின்றது. திருமுகம் எழுதும்போது உ சிவமயம் போட்டு எழுதும் சைவ மரபினை இவர் திருமுகங்களில் காணமுடியும். அவர் தனது திருமுகமொன்றில்.

"அரும்பிய கொன்றை அணிநத சென்னியன் ஆறும் பிறையும் சூடிய அழகன்

இறையவன் மறையவன் ஏழுலுகாளி

ஈசன் மழுப்படை தாங்கிய கையன்

உம்பர்தலைவன் உயர்கை லாயனே 10

என்ற பாடலை எழுதி அதனைப் பாடம் பண்ணு என எழுதியிருப்பது அவரது சிவநெறிக் கொள்கை உறுதிப்பாட்டை நன்கு புலப்படுத்தி நிற்கின்றது.

வைணவ இறைக் கோட்பாடு

சிவநெறிக் கொள்கையுடையவராக விளங்கிய சிவயோக சுவாமிகள், இயற்கையில் திருமாலைக் கண்டு பாடிய வைணவ ஆழ்வார்கள் போன்ற இறைஞானியாகவும் விளங்கினார். அவர் மலைநாட்டில் இருந்து 17-02-1932இல் எழுதிய திருமுகமொன்றில் இயற்கை எழிலில் திருமாலைக் கண்டு மகிழ்கின்றார் "நம்மைச் சூழ வரவிருக்கும் மலைகள் திருமாலைப் போல் பச்சைப் பசேலெனக் காணப்படுகின்றன. இரைந்து விரைந்து செல்லு மருவிகளின் இனிய சத்தம் திருமாலின் கரத்திலிருந்து இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கும் பாஞ்ச சன்னியத்தை ஒத்தன. சந்திரனுஞ் சூரியனு மிரு பாரிகளிருபக்கத்தும் விளங்குவது போல் விளங்குகின்றன. மரக்கொம்பரிலிருந்து தீங்குரலாற்பாடும் பட்சிகள் அக்கண்ணன் புல்லாங்குழல் பாடுவதை ஒத்திருக்கின்றன. தேயிலை கொய்யும் மகளிர் திருமாலின் இனிய பத்தரான கோபிகாஸ்திரிகளை நேர்வர். இவ்விடத்துக் கறங்கும் முரசம் துரியோதனனுடன் போருக்குச் சென்ற பஞ்ச பாண்டவரின் தேரின்மீது அடிக்கப்படும் பேரிகையை இசைந்தது எப்படித் திருமால் சகல வளங்களுடனுந்

காகிதச்சுவடி ஆய்வுகள்

411