உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




துவாரகையில் விளங்கினானோ அப்படியே இம்மலை இவ்விடத்து மிளிர்கின்றது கண்ணனுடைய விருந்தினராக நாம்

இவணிருக்கிறோம்"1"

என்ற திருமுகம் அவரது வைணவ இறைக்கோட்பாட்டின் ஆழத்தைப் பிரதிபலிக்கின்றது. அவரது படைப்புகளில் இத்திருமுகம் ஒன்றே அவரது வைணவ இறையுணர்வைப் புலப்படுத்துகின்றதெனலாம்

ஆன்மக் கோட்பாடு

ஆன்மா அழிவதில்லை என்பதும் அது உடம்போ. மனமோ, புத்தியோ. சித்தமோ அல்ல என்பதும் சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கருத்தாகும். இதனை வெளிப்படுத்துவது போன்று சிவயோக சுவாமிகள்.

"நீ உடம்பன்று. மனமன்று. புத்தியன்று. சித்தமன்று,நீ ஆத்மா. ஆத்மா ஒருநாளும் அழியாது. இது மகான்களுடைய அநுபவ சித்தாந்தம் இந்த உண்மை உனது உள்ளத்தில் நன்றாகப் பதியக் கடவது'

112

எனத் தனது திருமுகத்தில் குறிப்பிடுகின்றார்

ஆன்மாவும் கடவுளும்

ஆன்மாவும் கடவுளும் ஒன்று' என்பது வேதாந்தத் தத்துவத்தின் அடிப்படைக் கருத்தாகும் இச்சிந்தனை உபநிடதங்களில் ஊற்றெடுத்துச் சங்கர வேதாந்தத்தில் உச்சநிலை பெறுகின்றது இச்சிந்தனை மரபில் சிவயோக சுவாமிகளும் விளங்குகின்றார் ஆன்மா தான் கடவுள் என்பதை அவர்.

'எதனால் கண் காணுகிறதோ? எதனால் காது கேட்கிறது? எதனால் மூக்கு முகருகின்றது? எதனால் வாய் பேசுகின்றது? அதுதான் ஆத்துமா அல்லது கடவுள் "13

எனத் தனது திருமுகத்தில் (17-06-1938) குறிப்பிடுகின்றார் இந்த உணர்வின் வெளிப்பாடாகவே அவர் தனது திருமுகங்களில் 'அவனே தானே 'அவனே நானே '15 என்றும் கையொப்பமிட்டுள்ளார்.

வினைக் கோட்பாடு

என்றும்.

'நான் ஐம்பது வருடங்களுக்கு மேலாகச் செய்ய வேண்டியவறறை எல்லாம் செய்து விட்டேன். போதிக்க வேண்டியவற்றைப் போதித்து விட்டேன். ஓருகுறையும் விடவில்லை' என்று கூறிய சிவயோக சுவாமிகள் 'நவரத்தின' என்பவருக்கு 07-02-1934இல் எழுதிய திருமுகத்தில் வினைப்பயனை நாம் அனுபலித்தே தீரவேண்டும் என்ற சைவ சித்தாந்த வினைக்கோட்பாட்டின் உட்பொருள் பொதிந்து விளங்குவதனைக் காணலாம். இதனை அவரின் திருமுகம்,

412

'வினைப்பயனை வெல்வதற்கு வேதமுதலாய வனைத்தாய நூலகத்து மில்லை'

காகிதச்சுவடி ஆய்வுகள்