உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எனக் குறிப்பிடுவதாலறியலாம். நமது இன்றைய நிலைக்கு 'நாம்'தான் காரணம் என்ற சைவ சித்தாந்த வினைக்கோட்பாட்டையே இவர். 'நன்மை தீமை நாம் தரவருவன பிறராலன்று' என்று குறிப்பிடுகின்றாரெனலாம்.

பத்திக் கோட்பாடு

சிவயோக சுவாமிகள் எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் பத்தி ஞானியாக விளங்கினார். எல்லாவற்றிலும் ஓர் இறைவனே இருக்கின்றான் என்பதை உணர்ந்து அதைவிட வேறில்லை யென்று தியானிக்கின்றவன்தான் உண்மையான பக்தனென்று சொல்லப்படுவான் என்ற சிவயோக சுவாமிகளின் திருமுகக் குறிப்பு அவரின் பத்திக் கோட்பாட்டைப் புலப்படுத்துகின்றது. 'யாவரிடத்தும் அன்பாயிரு. அதாவது உன்னைப் போல எவரையும் பார்' என்ற சிவயோக சுவாமிகளின் திருமுகக் குறிப்பு அவரது பரந்த பக்தி நோககைச் சுட்டி நிற்கிறது. பத்திக் கோட்பாட்டின் உன்னத வெளிப்பாடு பத்தி வைராக்கியமாக விளங்கும். இதனைச் சீவன்முத்தர்களிடம் காணமுடியும். இப்பத்தி வைராக்கியம் இவரிடம் விளங்கியதை.

CC

'அஞ்சுவதி யாதொன்று மில்லை. அஞ்ச வருவதியா தொன்றுமில்லை' யென்னு மான்றோர் மெய்ம்மொழி நம்மைப் பிறப்பிறப்பாகிய கடலைக் கடப்பிக்கும் தெப்பம், 'இதைத் துணையாகக் கொண்ட வெமக்கென்ன குறை

என்ற திருமுகவரிகள் சுட்டி நிற்கின்றன.

அறக்கோட்பாடு

சிவயோக சுவாமிகள் தன்னைப் போன்று மற்றவர்களை நேசித்தலையே தவம் என்றும் அதுவே அறம் என்றும் குறிப்பிடுகின்றார். இதனை அவர் தனது திருமுகமொன்றில்.

"தன்னைப் போல் மற்றவர்களையும் நேசித்தலே 'தவம்' அதுவே அறம் "16

என்று குறிப்பிடுவதாலறியலாம். சிவயோக சுவாமிகள் சைவ வாழ்வியலை வாழ்ந்து காட்டியவர். எல்லோரும் அறமாகிய தரும நெறியினைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பது அவருடைய நோக்கமாக விளங்கியது. இதனை அவர்.

"நீ கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு அதாவது தருமநெறியிற் பிசகாதே’17

என்று குறிப்பிடுவதாலறியலாம்.

மனிதநேயக் கோட்பாடு

ஞானிகளிடம் காணப்படும் முக்கியப் பண்பு மனிதநேயம் ஆகும். சிவயோக சுவாமிகள் மனிதநேய யோகியாக வாழ்ந்து காட்டியவர். சாதிப் பாகுபாடு பாராட்டாதவர் எல்லோரும் தனது சுற்றத்தவர் என்ற உயர்நிலையில் வாழ்ந்தவர். இத்தகைய மனிதநேயக் கோட்பாட்டினை இலரெழுதிய திருமுக வரிகள்

காகிதச்சுவடி ஆய்வுகள்

413