உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தெளிவாக்குகின்றன

"நாங்கெ

ஒரே சமயத்தையும் ஒரே சாதியையும்

சார்ந்தவர்கள் *18

யாவும் நமது ஊர். யாவரும் நமது கேளிர்19

கடமைக் கோட்பாடு

சிவயோக சுவாமிகள் கடமையை ஒரு கோட்பாடாகவே வற்புறுத்தினார்.

இதனை அவர் தனது திருமுகங்களில்.

"உனது கடமையை நீ நல்லாய்ச் செய்20

நான் உங்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றுண்டு நீங்கள் உங்கள் கடமையை வழுவாது செய்யுங்கள்21

"செய்வன திருந்தச் செய்22

என்று குறிப்பிடுவதாலறியலாம்

சிவயோக சுவாமிகளும் யாழ்ப்பாண மக்களும்

காசித் திருத்தல யாத்திரை செய்த சிவயோக சுவாமிகள் 30-11-1940இல்

காசியிலிருந்து எழுதிய திருமுகத்தில்

"இருந்த இருக்கின்ற இருக்கும் யாழ்ப்பாணத்தா

ரெல்லார்க்குமாகக்

முடிந்துவிட்டன’23

கருமாதிகளெல்லாஞ் செய்து

என்று குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாண மக்கள் எப்பொழுதும் நற்கதி பெறும் பொருட்டே இவர் காசியில் கருமாதிகள் செய்துள்ளார் போலும்

முடிவுரை

இவ்வாறாக ஈழத்துச் சிவயோக சுவாமிகளின் திருமுகங்களை நோக்கும்போது அவர் சிவநெறியை வாழவியலாகக் கொண்டு வாழந்து காட்டியவர் என்பதும், முருகன். திருமால் ஆகிய கடவுளர்மீதும் பற்றுடையவர் என்பதும். ஒளியைக் கடவுளாக வணங்கும் கொள்கையுடையவரென்பதும். ஓர் இறைக் கோட்பாட்டாளர் என்பதும், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளில் மட்டுமன்றி வேதாந்த தத்துவத்திலும் நம்பிக்கையுடையவ ரென்பதும், பரந்த மனித நேயம் கொண்டவரென்பதும். கடமையே கடவுள் என்ற கோட்பாட்டினர் என்பதும், யாழ்ப்பாணத்து மக்களுக்கு உய்வுண்டு என்பதை உணர்ந்து செயற்பட்ட சிவஞானி என்பதும் பெறப்படும் உலகியலில் உள்ளவர்களைப் போன்று சிவஞானிகளும் வார்த்தைகளால் மட்டுமன்றித் திருமுகங்கள மூலமாகவும் தமது சமயத் தத்துவக் கோட்பாடுகளைப் புலப்படுத்தியுள்ளமைக்கு ஈழத்துச் சிவயோக சுவாமிகள் ஓர் உரைகல்லாகும்.

414

காகிதச்சுவடி ஆய்வுகள்