உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மொழியும் எழுத்தும்

ஒவ்வொரு சமுதாயத்தினரும் தாம் பேசும் மொழிக்கென உருவாக்கிக் கொண்ட எழுத்து அல்லது வரிவடிவம். அச்சமுதாயம் பேசும் மொழியினை அல்லது ஒலி வடிவத்தினைப் பதிவு செய்யப் பயன்படுகிறது. தமிழ் மொழிக்கெனத் தமிழ் முத்தும். தெலுங்கு மொழிக்கெனத் தெலுங்கு எழுத்தும். சமக்கிருதம். மராத்தி. இந்தி ஆகிய மொழிகளுக்குத் தேவநாகரி எழுத்தும். பார்சி. உருது மொழிகளுக்கெனப் பெர்சிய அராபி எழுத்தும். ஆங்கிலம், பிரெஞ்சு. டச்சு மொழிகளுக்கென உரோமன் வரிவடிவமும் பயன்படுகின்றன. எனினும். கி.பி. 13ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை பார்சி மொழியினை எழுதத் தனிவகை எழுத்தான 'சிகஸ்த' பயன்பட்டது போல மராத்தி மொழியினை எழுத 'மோடி' என்னும் சுருக்கெழுத்து வடிவம் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், மக்களின் நடைமுறை வாழ்விலும். இலக்கியப் படைப்பிலும் தேவநாகரி எழுத்து பயன்படுத்தப்பட்டது. மன்னர்களின் ஆணைகள். கடிதப் போக்குவரத்து. கணக்கு வழக்குகள். அன்றாடக் குறிப்புகள் முதலிய மராத்தி மொழிப் பதிவுகள் மோடி எழுத்தில் எழுதப்பட்டன. இவ்வாறு. மோடி எழுத்தில் எழுதப்பட்ட மராத்தி மொழி ஆவணங்கள் 'மோடி ஆவணங்கள்' என அழைக்கப்படுகின்றன

மோடி எழுத்தின் தனித்தன்மை

'மோட்' (Mod) என்ற மராத்தி மொழியின் மூலச்சொல்லுக்கு உடைத்தல். சிதைத்தல் எனப் பொருளுண்டு தேவநாகரி எழுத்தினை உடைத்துச் சிதைத்து உருவாக்கப்பட்ட எழுத்தாதலின் இது 'மோடி' எழுத்தாயிற்று. கி. பி 13ஆம் நூற்றாண்டில். தேவகிரியை ஆண்ட யாதவ அரசர்களின் அவையில் ஆவண அலுவலராக இருந்த ஹேமாட்பந்த்' என்பவரே இவ்வெழுத்து முறையை உருவாக்கி ஆவணங்களை விரைவாக எழுத வழி வகுத்தார். இவ்வெழுத்தின் தனித்தன்மைகளாவன

1 மோடி எழுத்தில் குறில் நெடில் வேறுபாடு கிடையாது.

2 ஒரே நேர்கோட்டில் சொல் பிரிக்காமல் தொடர்ந்து எழுதப்படுகின்றது. 3. சுருக்கெழுத்து வடிவங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

4. பலவகையான முத்திரைகள் மூலம் கடிதத்தின் தொடக்கம். முடிவு. கடிதம் எழுதப்பட்ட மன்னனின் பெயர் ஆகியன வெளிப்படுத்தப்படுகின்றன.

5. பெரும்பாலும் இசுலாமிய குறிப்பிடப்படுகின்றது

தஞ்சை மோடி ஆவணங்கள்

ஆண்டே

இவ்வாவணங்களில்

கி. பி 1676 முதல் 1855 வரையிலான சுமார் 180 ஆண்டுக்காலத்தில் தஞ்சை வளநாட்டை 12 மராத்திய மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களது ஆட்சிக்காலத்தில் மோடி எழுத்தைப் பயன்படுத்தி மராத்தி மொழி ஆவணங்கள் எழுதப்பட்டன மகாராட்டிரப் பகுதியிலிருந்து தஞ்சை வந்த சிவாசியின் தம்பியாகிய மராத்திய மன்னன் ஏகோசியும் அவரது பரம்பரையினரும் ஈண்டும் தங்களது சுருக்கெழுத்து

418

காகிதச்சுவடி ஆய்வுகள்