உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வடிவான மோடி எழுத்தைப் பயனபடுத்தியே மராத்தி மொழி ஆவணங்களை எழுதினர்.

தஞ்சை வளநாடு வடக்கே சிதம்பரம். மேற்கே கோவை. கரூர், திருச்சி தெற்கே இராமநாதபுரம், கிழக்கே நாகப்பட்டினம் ஆகிய இந்நான்கெல்லைப் பகுதியில் பரவியிருந்தது. இதனால் இப்பகுதியிலிருந்த மராத்திய அரசு அலுவலர்கள் தமது அன்றாட அலுவல் குறிப்புகள். கணக்கு வழக்குகள், ஆணைகள் முதலியவற்றை மராத்தி மொழியில் மோடி எழுத்தில் எழுதி வைத்தனர். இதனாலேயே. இராமநாதபுரம். மதுரை, திருச்சி. கோயம்புத்தூர். சிதம்பரம் ஆகிய இடங்களிலும் மோடி ஆவணக்கட்டுகள் கிடைக்கப்பெற்று இன்று அவை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் குளிரூட்டு ஆவண அறையில் பாதுகாத்து

வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சை அரண்மனை ஆவண அறையில் (தஸ்தா மஹால்) வைக்கப்பட்டிருந்த மராத்திய அரச ஆவணங்கள் பின்னாளில் சரசுவதி மகால் நூலகத்திற்கு மாற்றப்பட்டு ஆங்கு கி. பி. 1962ஆம் ஆண்டு வரலாற்றுக் குழுவினரின் முயற்சியால் பகுத்துப் பிரிக்கப்பட்டன. அவை A, B,C என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மிக முக்கியமான ஆவணங்களாகப் பிரிக்கப்பட்ட A மற்றும் B பிரிவு ஆவணங்கள் சென்னை ஆவணக் காப்பகத்திலும் C பிரிவு ஆவணங்கள் சரசுவதி மகால் நூலகத்திலும் வைத்துப் பாதுகாக்கப்பட்டன. இனாம் மற்றும் வருவாய் தொடர்பான ஆவணங்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திலுள்ள ஆவண அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டன தற்போது சென்னை ஆவணக் காப்பகத்திலிருந்த A மற்றும் B பிரிவு ஆவணங்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும் தஞ்சை மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திலிருந்த இனாம் மற்றும் வருவாய் தொடர்பான ஆவணங்கள் தஞ்சை சரசவதி மகால் நூலகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளன. ஆக. இனித் தஞ்சை மராத்திய மன்னர்களின் மோடி ஆவணங்களைப் பற்றிய ஆய்வினை மேற்கொள்ள விரும்புவோர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும், சரசுவதி மகால் நூலகத்திற்கும் சென்றாலே போதுமானது பதிப்பில் பிறமொழி ஆவணங்களும் மோடியும்

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை. தமிழ் தவிரப் பிறமொழி ஆவணங்களைப் பதிப்பித்து வெளியிட்டாலன்றித் தமிழக வரலாற்றினை முழுமையாக வெளிக்கொணர இயலாது. அதன் முதல்கட்டமாக மராத்திய மோடி ஆவணங்களை மொழிபெயர்த்துப் பதிப்பித்து வெளியிடும் பணி அமைதல் நலம். அம்முயற்சியில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும். சரசுவதி மகால் நூலகமும் இறங்கியிருப்பதால். மோடி உள்ளிட்ட பிறமொழி ஆவணங்களைப் பதிப்பித்து வெளியிடுவதற்கான நெறிமுறைகளைக் கீழ்க்கண்டவாறு வகுத்துக் கொள்வது சிறந்தது.

1. எம்மொழி ஆவணமாயினும் மூல ஆவணங்களை அப்படியே நிழற்படப் பிரதியாக வெளியிடல் வேண்டும்.

2. அம்மொழியினை எழுதத் தற்போது பயன்படுத்தப்படும் வரி வடிவத்தில் அவ்வாவணங்களை எழுத்துப் பெயர்ப்புச் செய்து மூல ஆவணத்தில் உள்ளவாறே தரவேண்டும்.

காகிதச்சுவடி ஆய்வுகள்

419