உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செ. சேம் கிறிஸ்டோபர் கிறித்தவ இருக்கை

தத்துவ மையம் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

தத்துவ போதகர் இராபர்ட் தே நொபிலி அடிகளாரின் திருமுகங்கள்

முன்னுரை

தத்துவ போதகர் இராபர்ட் தே நொபிலி கி. பி. 1577ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் உரோமை நகரில் பிறந்தார். இவர் தனது தந்தை பியர் பிரான்சிஸ்கோ என்பவருக்கு மூத்த மகனாவார். இளமையிலேயே இறைப்பணியாற்றுவதில் இணையற்ற ஈடுபாடு கொண்ட இவர் 1603ஆம் ஆண்டு இறைப்பணியில் தன்னை அர்ப்பணம் செய்து கொண்டார். நொபிலி அடிகளார் தம் பணித்தளமாகப் பாரதத்தைத் தெரிந்தெடுத்து 1605ஆம் ஆண்டு மே திங்கள் 20ஆம் நாள் கோவா கடற்கரையை வந்தடைந்தார். கோவாவிலும், கொச்சியிலும் பணி புரிந்த இவரது பணி தமிழகத்திற்கு மிகவும் ஏற்புடையது எனக் கருதிய சேசு சபைத் தலைவர் அருள்திரு ஆல்பர்ம் இலயர்சியோ நொபிலியை மதுரைக்கு 1606ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 15ஆம் நாள் அழைத்து வந்தார்.

தமிழ் மக்களோடு பழக இன்றியமையாது துணைபுரியும் தமிழ் மொழியை இராப்பகலாகப் பயின்றார். இம்மொழியில் பேசுவது மட்டுமன்றி 1607ஆம் ஆண்டு தொடங்கி 1658ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 16ஆம் நாள் உயிர் துறக்கும்வரை அரிய பெரிய நூல்களைத் தமிழிலும். சமக்கிருதத்திலும், தெலுங்கு மொழியிலும் இயற்றினார். இவர் கிறித்தவ சமயத்திற்கு ஆற்றிய பணிக்காலத்தில் பல கடிதங்கள் உயர் சமயத் தலைவர்களுக்கு எழுதியுள்ளார். அவற்றில் காணப்படும் பண்பாடு. சமயம், கல்வி, தத்துவம். மொழிப்பற்று முதலியவற்றையும் இதுபோன்று அவரைப்பற்றி அவருடன் வாழ்ந்தவர்கள் பல கடிதங்களையும் எழுதியுள்ளனர். இக்கடிதங்கள் நொபிலியின் பணிகள்பற்றித் தெளிவுபடுத்துகின்றன.

மதுரை நகரம்

நொபிலி அடிகளார் தாம் வாழ்ந்து வந்த மதுரை மாநகரைப் பற்றி மாநில சமயத் தலைவர்களுக்குப் பல மடல்கள் எழுதியுள்ளார். அவைகளில் அவர் குறிப்பிடுவதாவது,

"மதுரை எவ்வளவு அழகான, மக்கள் தொகை நிறைந்ததொரு நகரம்.. ஆலயப் பிரகாரங்களில் எல்லாம் கல்வி பயிலும்

காகிதச்சுவடி ஆய்வுகள்

423