உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிரம்மச்சாரிய இளைஞர்கள், அங்காடிகளில் எல்லாம் அழகான வாணிபப் பொருள்கள், தெருக்களில் எல்லாம் சேணமிடப்பட்ட குதிரைகள். யானைகளின் அணிவரிசை

31

என விவரிக்கின்றார். இது அவரது காலத்து மதுரை மாநகரம் எவ்வளவு முக்கியமான நகரம் எனச் சொல்லாமல் சொல்லுகின்றார்.

பண்பாடு

நொபிலி அடிகளார். கர்தினால் பெல்லார்மின் என்னும் சமயத் தலைவருக்கு எழுதிய கடிதத்தின் மூலம் அன்றைய சமுதாயப் பண்பாட்டை ஓவியமாக வரைந்து காட்டியுள்ளார். அக்கடிதம் வருமாறு:

கல்வி

"நான் ஒரு கூரை வீட்டில் வசிக்கிறேன். பூசை நிறைவேறியதும் பேட்டி அளிக்கச் சித்தமாகிறேன். யார் வேண்டுமானாலும் உள்ளே வந்து பேசலாம். எவரும் வராத காலங்களில் இந்த நாட்டு மொழியில் நூல் எழுதுவேன். முட்டை, மீன், இறைச்சி என் வாசல் நடையைத் தாண்டி நுழையமுடியாது. இத்தகைய தவ வாழ்வு வாழாவிட்டால் இந்த நாட்டு மக்கள் என்னை ஒரு குரு என்று மதிக்கமாட்டார்கள். என்னிடம் வரவும் இசையார்கள். இப்பொழுதும் ஆஸ்துமா நோயால் மூச்சுவிட முடியாத நிலையில் இக்கடிதத்தை எழுதுகின்றேன். இப்படிப்பட்ட தனிமையும் தபசும் தளர்ச்சியை விளைவிக்கின்றன"2

நொபிலி காலத்தில். மதுரையைச் சுற்றியுள்ள இடத்தில் காணப்பட்ட கல்வியின் நிலையை ஒரு கடிதத்தில் குறிப்பிடுகின்றார். இதன் மூலம் அறியப்படும் செய்திகள் வருமாறு நாயக்க மன்னர்களின் ஆதரவோடு பல கல்விச் சாலைகள் அங்கே நடந்தன. பத்தாயிரம் பிராமண இளைஞர்கள் 200 அல்லது 300 பேர் வீதம் பல பாடசாலைகளில் படித்து வந்தனர். ஒவ்வொரு பாடசாலையும் ஒரு குருவின் கண்காணிப்பில் இருந்தது. மாணவர்கள் தங்களுக்கான பாடத்தையும் ஆசிரியரையும் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.3

தத்துவம்

424

"இங்குள்ள குருக்களை நாம் அஞ்ஞானிகள் எனக் கருதியிருக்கிறோம் அப்படி நினைப்பது தவறெனக் கருதுகிறேன். அவர்கள் பின்பற்றும் ஒரு ஓலை சுவடியைப் படித்து பார்த்தேன். உரோமில் நான் பயின்ற சமய தத்துவக் களஞ்சியங்களைப் போலவே இந்த சுவடியிலும் பல உயரிய தத்துவங்களைக் கண்டேன். அவர்களுடைய தத்துவங்களுக்கும் நமக்கும் அடிப்படையான வேறுபாடுகள் இருந்தாலும் அவை முழுவதுமே அபத்தம் எனச் சொல்லி ஒதுக்க முடியாது'

காகிதச்சுவடி ஆய்வுகள்