உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என நொபிலி தன்னுடைய சமய அதிபருக்கு எழுதிய கடிதத்தில் இந்திய சமயத் தத்துவங்கள். கிறித்தவ சமய இறையியலுக்கு அதிக வேறுபாடின்றிக் கர்ணப்படுகிறது என எழுதியுள்ளார். மேலும்

"இங்கு கற்பிக்கப்படும் வேதாந்த சமய நெறிகளின் பெயரால் அவை தனித்தனிப் பெயரிட்டு அழைக்கப்பட்டன. சமய தத்துவம் பற்றிய படிப்பு - சிந்தாமணி என அழைக்கப்பட்டது இது நான்கு அல்லது ஐந்து வருடங்கள் பயில வேண்டும் அதன் பின்னர் வேதாந்தம் முதலிய பிற நெறிகளைப் பயில வேண்டும். மீமாம்சை. வேதாந்தம், சாங்கியம். யோகம். வைசேசிசம். நியாயம் எனப் பல பிரிவுகள் இருந்தாலும் வேதாந்தமே இவற்றில் எல்லாம் தலைமையிடம் பெற்றிருந்தது'

என ஒரு கடிதத்தில் இந்திய சமயத் தத்துவங்களை விளக்கியுள்ளார்.

சமயம்

தமிழ் நாட்டின் அப்போஸ்தலர் என்று பெருமையாகப் பேசப்படும் நொபிலி அடிகளாரின் முற்போக்கான முறைகளால் உயர்குடி மக்களான பிராமணர்களும் கிறித்தவ சமயத்தைத் தழுவினர். உணவு, உடை, உறையுள் போன்றவற்றில் தமிழ் முறையைக் கையாண்டு காதில் குண்டலம். காலில் பாதக்குரடு. நெற்றியில் சந்தனம். மார்பில் பூணூல். தலைப்பாகை என்று தன்னை ஒரு தமிழ் சந்நியாசியாக மாற்றிக் கொண்டார். கிறித்தவக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் எவரும் தமது பழக்க வழக்கத்தை. உதாரணமாகக் குடுமி வைத்துக் கொள்வது. திருநீறு அணிவது பொட்டு வைத்துக் கொள்வது இவற்றைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்று எடுத்துக் கூறினார். கருதக்கூடாது என்பதுதான் இவரின் கொள்கை.

இவற்றைச் சமயச் சடங்காகக்

நொபிலியின் சமயக் கொள்கையை எதிர்த்து தாழ்ந்த குலமக்களுக்குச் சமயப்பணி செய்த கொன்சாபோபர்னாந்துசு என்பவர் போப்பிற்கு இவர் கிறித்தவ அடிப்படையான கொள்கையில் மாற்றம் செய்து விட்டார் என்றும். போதனையும். முறையும் பரம்பரைக் கொள்கைக்கு முரணானவை என்றும் கடிதங்கள் எழுதினார். இதனால் நொபிலியின் சமயப்பணிக்குத் தடை ஏற்பட்டது. இந்நிலையில் நொபிலி பல கடிதங்களை 15ஆம் கிரகோரி என்ற போப்பிற்குப் பல விளக்கங்களை எழுதினார். அதனை ஆய்வு செய்து 1623ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 31ஆம் நாள் 'ரோமானே சேடிஸ் அன்றிஸ்டெஸ்' என்ற கடிதம் ஒன்றால் தத்துவபோதகரின் சமயப்பணி முறைக்கு ஆதரவும். ஆசியும் வழங்கினார்.

மொழிப்பற்று

தத்துவ போதகர் பன்மொழிப் புலவர் மேலைநாட்டு மொழிகளில் கிரேக்கம். இலத்தீன், இத்தாலியம், போர்த்துக்கீசியம் முதலிய மொழிகளில் இவருக்கு நல்ல பயிற்சி உண்டு. கிரேக்கத்தைத் தவிர மீதி மொழிகளில் எழுதிய மடல்களும். கட்டுரைகளும் பல இன்றும் இருக்கின்றன. இந்தியா வந்தபின் தமிழ். தெலுங்கு. காகிதச்சுவடி ஆய்வுகள்

425