உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமக்கிருதம் என்ற மூன்றிலும் நல்ல பயிற்சி பெற்று அம்மொழிகளில் பல நூலகளை எழுதியிருக்கிறார் 5

5

நொபிலி பற்றிய பிற கடிதங்கள்

நொபிலி அடிகளாருடன் பணியாற்றிய அருள்திரு விக்கோ. அருள்திரு ஜான். அருள்திரு லெயர்சியா தொன் பிரான்சிஸ் ராய். சுவாமி டி.

கிறிஸ்டோபர் கோஸ்டா ஆகியோர் நொபிலி அடிகளார் பற்றிப் பல கடிதங்கள் எழுதியுள்ளனர். அக்கடிதங்கள் வாயிலாக நொபிலி அடிகளாரின் தனிச்சிறப்புக்கள் பலவற்றை அறிந்து கொள்ள முடிகின்றது அவற்றின சில முக்கியக் கடிதக் குறிப்புக்கள் இங்கே தரப்படுகின்றன

கிரங்கனூர் பேராயர் தொன் பிரான்சிஸ்ராஸ். அருள்திரு அக்குவா வீவா சுவாமி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் நொபிலி அடிகளாரைப் பற்றிக் குறிப்பிடுவதாவது

"என்னுடைய மறை மாவட்டத்தில் உள்ள மதுரை மிஷன் மிகவும் ஆன்மீகம் வாய்ந்தது: கடுமையான உழைப்பிற்கு இடமானது. அங்குள்ள சேசு சபைக் குரமார் கடவுளுக்கு தம்மை முழுமையும் அற்பணித்தவர்கள் இந்த மிஷன் இறை ஏவுதலால் ஏவப்பட்டது என்பது திண்ணம். நொபிலி புதிய நடையுடை பாவனையை மேற்கொண்டபோது என்னைக் கவர்ந்தார். நான் அவருடைய ஆயர் என்ற நிலையில் என் ஆலோசனையைக் கேட்டார். ஆ நாங்கள் ஒரு திட்டத்தை நடைமுறையை உருப்படுத்தத் தீர்மானித்ததும் நொபிலி அதனைப் படிப்படியாக அமுல் நடத்தினார். நான் ஓரளவுக்கு அவருக்கு உதவியாகப் பணிபுரிந்தேன் அவருடைய புனித முயற்சிகளுக்குத் துணை நின்றேன் பிராமணர்கள் அணிகின்ற பூணூலும், உயர்சாதி இந்துக்கள் வைத்துக் கொள்ளும் குடுமியும். சந்தனப் பூச்சும். இன்னபிற சாதிச் சடங்குகளும் சமயச் சார்புடையன அல்ல என்றும் அவை அவர்களுடைய சமூக ஆசாரத்திற்குரியனவே எனறும் கண்டோம் இவைகளை அவர்கள் அனுசரிப்பதனால் யாதொரு தீங்கும் ஏற்படாதெனவும் தீர்மானித்தோம் '6

இவ்வாறு நொபிலியின் சமயப் பரப்புதல் முறைக்கு ஆதரவு தெரிவித்து எழுதியுள்ளார்.

கலைவல்லுநராகத் திகழ்ந்த திருமலை நாயக்க மன்னரின் நட்பு நொபிலிக்குக் கிடைக்க, அரண்மனைக்கே வருமாறு தத்துவ போதகரை அழைத்து மன்னர் சிறப்புச் செய்தார். அவருடன் சென்ற சுவாமி டி கோஸ்டா எழுதிய கடிதத்தில்.

426

டி

'அரண்மனைக்கு சென்ற எங்களை நாயக்க மன்னர் அன்புடன்

எதிர்வந்து வரவேற்றார் நொபிலி பரிசளிக்கக் கொண்டு வந்திருந்த இசைக் கருவிகளை யெல்லாம் வியப்புடன் பார்த்தார். நொபிலி அடிகளார் மூன்று மொழிகளில் திறம்பட பேசக் கண்டு.

காகிதச்சுவடி ஆய்வுகள்