உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மன்னர் சென்னை செல்வதற்கு மதுரை வரையில் குதிரைகள் பூட்டிய கோச் வண்டியில் சென்றிருக்கிறார். பின்பு புகை வண்டியில் பயணம் தொடர்ந்திருக்கிறார் குதிரைகளும் வண்டியும் புகை வண்டியில் கொண்டு செல்லப் பெற்றுச் சென்னை நகர்ப் பயணத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

மன்னர் பாஸ்கரர் வெள்ளையாட்சிக்குட்பட்டே நிருவாகம் இயற்றும் பொறுப்பிலிருந்தார். முழு உரிமையுடைய மன்னராக இல்லாமை மன்னர் உள்ளத்தில் கவலை தோற்றியிருக்கக் கூடும். மன்னர் திருமணத்திற்கே வெள்ளை ஆட்சியின் ஒப்புதல் பெற்றே செய்ய வேண்டியிருந்திருக்கிறது. திருமணத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவிட்டுக் கொள்ள இசைவு வழங்கப் பட்டிருக்கிறது. இன்றைய மதிப்பிற்கு இஃது ஏறத்தாழ மூன்று இலட்சமாகும். இந்தத் திருமணம்13-05-1888 இல் நிகழ்ந்துள்ளது. இத்திருமணம் குறித்து ஒரு கும்மியும் ஓர் ஊசலும் அந்நாளில் புலவோரால் பாடப் பெற்றிருக்கின்றன.

கன்னல் கமுகு எழில்காட்டும் காழிவரு தம்மகனார்க்கு இன்னமுதம் தேவியொடும் எழுந்தருளி உண்பித்த மன்னவனார் திருவருளால் வாழிநனி துணைவியுடன் பன்னுபுகழ்ச் சேதுபதி பாஸ்கரசாமிக் கோவே.2

என்பது கும்மிப்பாட்டுள் ஒன்று. இவ்வாவணங்களில் சேதுபதி குடியினர் தம் இறையுணர்வும், சமய உணர்வும் வெளிப்படுகின்றன. இதுபோலும் ஆவணங்கள் பல இருப்பினும் இக்கட்டுரையில் குறிப்பிடத்தக்கதும். சேதுபதி மன்னரின் தமிழ் ஆர்வத்தைக் காட்டுவதுமான ஒன்று மகாவித்துவான் இரா. இராகவையங்காருக்குப் பாஸ்கரர் அளித்த ஊதிய உரிமை குறித்த ஆவணமாகும். இதனை ஐயங்கார் குடும்பத்தினர் இன்றும் பாதுகாத்து வருகின்றனர்.

மகாவித்துவான் இரா. இராகவையங்கார் சேது மன்னரவையின் அவைப் புலவராகவும். செந்தமிழ்ப் பத்திராபதிராகவும் விளங்கிய பேரறிவாளர்: சிறந்த ஆராய்ச்சித் திறன் மிக்கவர்: நயமிகு சொற்பொழிவாளர். இவருக்கு அரசு திங்கள் ஒன்றுக்கு ஐம்பது ரூபாய் ஊதியமாக அளித்து வந்தது. இதனை மாற்றிப் பசலி ஒன்றுக்கு அறுநூறு ரூபாயும், பல்லக்குச் செலவிற்காக முப்பத்தைந்துமாக ரூ635 ஐ அளிப்பதாக முடிவு செய்து அதனை ஓர் உரிமை ஆவணமாகப் பதிவு செய்து அளித்துள்ளனர்.

2

44

தங்களுக்கு மாதம் 1க்கு ரூ50க்குக் குறையாமல் கிராண்ட் ஏற்படுத்திபு தர்மமகமை ஐவேஜியில் தங்கள் ஆயுட்காலப் பரியந்தம் மாற்றப்படாத முக்கிய ஸ்திரமான ஐட்டமாக வைத்துத் தங்களுக்குச் செல்லாக்கி வரும்படி 1900 u பிப்ரவரி மாதம் 21உ யில் நம்மால் ஷெ தர்ம மகமைக்குப் ப்ரொஸீடிங்ஸ் எழுதப் பெற்று தாங்களும் மாசம் 1க்கு 50 ஆக மேற்படி மகமை ஐவேஜியில் பெற்று வருகின்றீர்கள். இப்போது நாம் நமது சமஸ்தான தர்மமகமை சம்பந்தமாக ஸ்திரமான ஏற்பாடுகள் செய்து வருவதில் தாங்கள் ஷெ மகமை ஐவேஜியின் தர்மத்தில்

தாம்பரம் கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் சின்னசாமிப் பிள்ளை பாடிய பாஸ்கரசாமி சேதுபதியவர்கள் திருமணவூசல்

436

காகிதச்சுவடி ஆய்வுகள்